இந்நாள் வரையில் நடத்தி Innal Varaiyil Nadathi

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்
நன்றி சொல்வேனே (2)

கூப்பிடும் போது ஓடி வந்தீர்
குறைவெல்லாம் நீக்கினீரே (2)
தோளில் நீர் சுமந்து கொண்டீர்
வழுவாமல் காத்து கொண்டீர்

கருவில் என்னை சுமந்து கொண்டீர்
கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)
போகும்போது கூட வந்தீர்
போதித்து நடத்தினீரே

பெலவீனத்தில் நடுங்கினேனே
கை கோர்த்து தேற்றினீரே (2)
பெலன் தந்து தாங்கினீரே
பெலவானாய் மாற்றினீரே

ஆசைகளை விளம்பினேனே
ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)
அநுகூலமும் துணையுமானீர்
அன்பான நேசர் ஆனீர்


Innal Varaiyil Nadathi Vantheer
Nandri Solvaenae – 2

Koopidum Bothu Oodi Vantheer
Kuraivellam Neekineerae – 2
Tholil Neer Sumanthu Kondeer
Vazhuvamal Kathu Kondeer

Karuvil Enai Sumanthu Kondeer
Kanmani Pol Kaathu Kondeer – 2
Pogum Pothu Kooda Vantheer
Bothithu Nadathineerae

Belaveenathil Naduginene
Kai Korthu Thetrineerae – 2
Belan Thanthu Thangineerae
Belavanai Matrineerae

Aasaigalai Vilambinene
Aacharyathal Nirapineerae – 2
Anoogolamum Thunaiyum Aaneer
Anbana Nesar Aaneer