Muzhu Ullathal Ummai Thuthipenமுழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்

முழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2)

1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு உள்ளதால்

2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே (2)
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு உள்ளதால்

3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே (2)
யாருக்கு அஞ்சிடுவேன் நான்? யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே (2) — முழு உள்ளதால்

Muzhu Ullathal Ummai Thuthipen
Thoni Uyarthi Um Nanmaigalai Solluven (2)
Vaanam Ozhindhu Ponalum Boomi Ozhindhu Ponalum
Um Varthai Oru Pothum Ozhiyadhae (2)

1) Magathuva Devan Neerae
Sarva Vallamaiyullavarum Neerae (2)
Aadhi Andham Neerae Alba Omega Neerae
Vazhnaalellam Neer Mathramae
Aadhi Andham Neerae Alba Omega Neerae
Vazhnaalellam Neer Pothumae — Muzhu Ullathal

2) Rajathi Rajan Yesu
Immanuvel Nammudanae (2)
Elshadaai Devan Neerae Ennai Kappavar Neerae
Kuraiyindri Ennai Nadathiduvire (2) — Muzhu Ullathal

3) Jeevathipathiyam Yesu
Jeevanin Belanum Avarae (2)
Yaruku Anjiduven Naan? Yaaruku Bayapaduven Naan?
Avarae En Thunaiyanarae (2) — Muzhu Ullathal

Puthiketatathe Anbin Varee Parum புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்

 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
  உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
  விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
  ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
 1. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
  நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
  உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
  குன்றாத தீரமும் தந்தருளும்.
 1. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
  மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
  வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
  நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

1, Puthiketatathe Anbin Varee Parum
Um Patham Andinome, Thevareer
Vivagathal inaikum Iru Perum
Ontraga Valum Anbai Euguveer

2, Aaa Jeeva Urtre Ivaril Um Nesam
Nal Nambikaium, Novou Saavilum
Um Peril Saarum Ooka Visuvaasam
Kuntrathe Theeramum Thantharulum

3, Poologa Thunbam Inbamaga Marti
Maei Samathanam Thanthu Thertuveer
Vaalnalin Eertil Motcha Karaierti
Niraintha Jeevan Anbum Nalguver

தேவாலயம் இது தேவ ஆலயம் Thevalayam ithu theva

தேவாலயம் இது தேவ ஆலயம்
தேவன் தங்கும் உள்ளம் அது
ஜீவனுள்ள தேவ ஆலயம்
தேவாலயம் தேவாலயம்
இது தேவாலயம்

அசுத்தம் இல்லாத இல்லம்
அது தேவ ஆலயம்
பரிசுத்தம் நிறைந்த உள்ளம்
அது தேவ ஆலயம்

ஒருமன நிறைவு உள்ள இல்லம்
அது தேவாலயம்
தேவன் வாசம் செய்யும் உள்ளம்
அது தேவாயலம்

கேரூபின்கள் சேராபீன்கள் வாசம்
அது தேவாலயம்
தேவனின் மகிமை தங்கும்
அது தேவாலயம்


Thevalayam ithu theva aalayam
thevan thangkum ullam athu
jivanulla theva aalayam
thevalayam thevalayam
ithu thevalayam

asuththam illatha illam
athu theva aalayam
parisuththam niraintha ullam
athu theva aalayam
theva aalayam

orumana niraivu ulla illam
athu thevalayam
thevan vasam seyyum ullam
athu thevayalam

kerupinkal serapinkal vasam
athu thevalayam
thevanin makimai thangkum
athu thevalayam


தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

தோம் தோம் தகநிதந ததிநதந
திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந
தோம் தோம் தகநிதந ததிநதந
அபிஷேக நாயகனே என்னை ஆளும்
அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே
அபிஷேக நாயகனே
உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்
இயேசு தெய்வமே
அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ
தவபுதனே சுதனே

நன்மைகள் செய்பவராய்
நானிலம் சுற்றி வந்த
நல்லவர் உம்மைப்பாட
நாவினை தந்தீர் நன்றி
கண்ணீரை துடைப்பவரே
என் கவலைகள் தீர்ப்பவரே
மண்ணின் மன்னவரே என்
மறைபொருள் ஞானவனே
பரனே பரனே பரனே

கள்ளன் என்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்ததினால்
உள்ளமே பொங்குதய்யா
நன்றி என்று சொல்லுதய்யா
சிலுவையின் நிழல் மறைவே
என் பாவம் போக்கும் பரிசுத்தரே
ஏலீமின் நீர் ஊற்றே
என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே
ஊற்றே ஊற்றே ஊற்றே

வேத பரம் பொருளே
ஓதும் மணிசுடரே
பாதம் பணிய வந்தேன்
கோடி கோடி நன்றியைய்யா
ஆவியின் அருள் நிறைவே
என் ஆனந்த கோமானே
சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
என் சேஷ்டபுத்திர நாயகனே
சுதனே சுதனே சுதனே


Thom thom thakanithana thathinathana
thinthara thom thanthininthana thiranathina
thom thom thakanithana thathinathana
apisheka nayakane ennai aalum
anpulla enthan theyvame iraimakane
apisheka nayakane
unnatha komane ivvulakam porrum
iyesu theyvame
anpukkup pirappitame en arunthava
thavaputhane suthane

nanmaikal seypavaray
nanilam surri vantha
nallavar ummaippata
navinai thanthir nanri
kannirai thutaippavare
en kavalaikal thirppavare
mannin mannavare en
maraiporul nyanavane
parane parane parane

kallan enru thallitamal
alli ennai anaiththathinal
ullame pongkuthayya
nanri enru solluthayya
siluvaiyin nizhal maraive
en pavam pokkum parisuththare
eelimin nir uurre
en thakam thirkkum jivanathiye
uurre uurre uurre

vetha param porule
oothum manisutare
patham paniya vanthen
koti koti nanriyaiyya
aaviyin arul niraive
en aanantha komane
sirushtikku sirushtikare
en seshtapuththira nayakane
suthane suthane suthane


நம்ம இயேசு ராஜா Namma iyesu raja

நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்

தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
கொள்ளையன் அங்கில்லே
தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
செக்போஸ்ட் அங்கில்லே
கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

நிலையில்லா உலக வீட்டின்
பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய
நித்திய வீடு நமக்கு சொந்தமே
ஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்கு
எல்லாமே இன்ப மயம் தான்

ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு
பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம்


Namma iyesu raja katkum pangkala
athil nirantharamay enrum thangkalam
aatalam patalam natanamati thuthikkalam
aatalam patalam natanamati thuthikkalam
thattip pariththu kollaiyatikkum

kollaiyan angkille
thatuththu niruththi kelvi ketkum
sekpost angkille
koththanarille angke siththalumille
namma iyesu raja kattum pangkala

nilaiyilla ulaka vittin
patukal angkille thevan kattiya
niththiya vitu namakku sonthame
eezhaiyumille panakkaranumille angku
ellame inpa mayam than

olivisum velissamaka iyesu nirparu
palissitum vennatai thariththu nirpatu
palingkuth tharaiyile nam patham payume
iyesuvotu vazhnthiruppom angka


நான் உனக்கு முன் Nan unakku mun

நான் உனக்கு முன் போய்
கோணலை நேராக்குவேன்
வெண்கலக் கதவை உடைத்து
இரும்புத்தாளை முறிப்பேன்
அந்தகாரப் பொக்கிஷங்களையும்
ஒளிப்பீடத்தின் புதையல் உனக்குக் கொடுப்பேன்
அதனால் நான் தேவனென்று
அறிந்து கொள்வாயே
இஸ்ராயேலின் தேவன்
நானே இஸ்ரவேலின் தேவன்
உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர்

நான் தரும் பலத்தினால் ஒரு
சேனைக்குள் பாய்வாய்
நான் தரும் பலத்தினால் ஒரு
மதிலைத் தாண்டுவாய்
உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலே
எல்லாவற்றையும் செய்து
உனக்கு பலனுண்டு

விஷத்தைத் தந்தாலும்
ஒன்றும் செய்யாது
சர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாது
தேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய்
சத்துரு கோட்டையை
தகர்த்து எறிந்திடுவாய்

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவாய் தேவ
வார்த்தையைக் கொண்டு
சாத்தானை விரட்டி அடிப்பாய்
திறந்த வாசலை உனக்கு முன்பாய் வைத்தேனே
பறந்து சென்று எனக்காக
ஊழியம் செய்வாயே


Nan unakku mun poy
konalai nerakkuven
venkalak kathavai utaiththu
irumpuththalai murippen
anthakarap pokkishangkalaiyum
olippitaththin puthaiyal unakkuk kotuppen
athanal nan thevanenru
arinthu kolvaye
israyelin thevan
nane isravelin thevan

unnaip per solli azhaiththavar
nan tharum palaththinal oru
senaikkul payvay
nan tharum palaththinal oru
mathilaith thantuvay
unnai pelappatuththum kiristhu ennale
ellavarraiyum seythu
unakku palanuntu

vishaththaith thanthalum
onrum seyyathu
sarppaththai mithiththalum onrum anukathu
thevapelaththinal thelkalaiyum mithippay
saththuru kottaiyai
thakarththu erinthituvay

singkaththin melum pampin melum
natanthe selluvay theva
varththaiyaik kontu
saththanai viratti atippay
thirantha vasalai unakku munpay vaiththene
paranthu senru enakkaka
uuzhiyam seyvaye


நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓ
நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்
காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்
உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்
இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு
உன்னத தேவன் மறைவை நோக்கி
ஓடு ஓடு ஓடு ஓடு

ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீ
ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே
காடு மேடுகள் கரடு பள்ளங்கள்
தவறும் இடறும் கவனம் தேவை
ஓடு ஓடு ஓடு ஓடு

வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்
ஆனதால் உன்
காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு
காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது
எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை
ஓடு ஓடு ஓடு ஓடு


Natkal neykiravan erikira
natavilum thiviramay ootukirathu oo
natkal anysarkaran oottaththaik
kattilum thiviramay ootukirathu oo

aasaikatti mosam seyyum saththan
unnai nasamakka nesa valaiyai virippan
inam kantitu ethirththu venritu
unnatha thevan maraivai nokki
ootu ootu ootu ootu

ootum oottam vinay enrum ootathe ni
aatum aattam vinay pokum maravathe
katu metukal karatu pallangkal
thavarum itarum kavanam thevai
ootu ootu ootu ootu

varukinra natkal pollathavaikal
aanathal un
kalaththaip payanullathay marritu
kalam sellathu ini vazhvum nillathu
ezhunthitu thirunthitu iyesuvantai
ootu ootu ootu ootu


வாருங்க என் நேசரே Varungka en nesare

வாருங்க என் நேசரே
வயல்வெளிக்குப் போவோம் அங்கே
என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்குக் கனியாய் கொடுப்பேன்

ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து
தினம் பாடி பாடி தினம்
நடனமாடி மகிழ்வேன்

நேசத்தால் சோகமானேன் உம்
பாசத்தால் நெகிழ்ந்த போனேன்
உம் அன்புக் கடலிலே
தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்

நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா
உம்மை தொழுவேன்


Varungka en nesare
vayalvelikkup povom angke
en nesaththin ussithangkalai
umakkuk kaniyay kotuppen

aarathanaiyil kalanthu kolven
apishekaththal nirainthituven
ummai thuthiththu thuthiththu
thinam pati pati thinam
natanamati makizhven

nesaththal sokamanen um
pasaththal nekizhntha ponen
um anpuk katalile
thinamum muzhkiye
ninthi ninthi makizhven

nir seytha nanmaikatkay
enna nan seluththituven
iratsippin paththiraththai
en kaiyil eenthi iratsaka
ummai thozhuven


பிஞ்சு போன உள்ளம் Pinysu pona ullam

பிஞ்சு போன உள்ளம் உள்ள
பிஞ்சு நானய்யா
தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா
வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா
அஞ்சி நிற்கும் எனக்கு தான்
துணைதான் நீரே ஐயா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா

காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா
தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா
பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா
புல்லுள்ள இடத்தில் மேய்க்கும்
மேய்ப்பன் நீர் ஐயா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா

சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா
உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா
கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா
சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா

உலகம் நேசம் எனக்கு இனி
வேண்டாம் இயேசய்யா
உண்மையான உந்தன் அன்பு
போதும் இயேசய்யா உன்
எண்ணம் ஏக்கம் எல்லாமே
நீர்தான் இயேசய்யா உம்
வருகையிலே என்னை சேர்த்துக்
கொள்ளும் ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா


Pinysu pona ullam ulla
pinysu nanayya
thanysame nirthan enthan eesaiyya
vanysanai nirantha intha ulakil thanayya
anysi nirkum enakku than
thunaithan nire aiya
eesayya eesayya
eesayya eesayya

kanum itam ellam kanal nir aiya
thakam thirkkum jivanathi nirthan iyesayya
pasi thirkkum jiva appam nirthan iyesayya
pullulla itaththil meykkum
meyppan nir aiya
eesayya eesayya
eesayya eesayya

sulakinal putaikkappatta kothumai nanyya
uthari thallappatta kuppai nanayya
kathari unthan patham vanthen eesayya
sithariya enakku vazhvu thanthir eesayya
eesayya eesayya
eesayya eesayya

ulakam nesam enakku ini
ventam iyesayya
unmaiyana unthan anpu
pothum iyesayya un
ennam eekkam ellame
nirthan iyesayya um
varukaiyile ennai serththuk
kollum eesayya
eesayya eesayya
eesayya eesayya


வாலிபரே கன்னியரே Valipare kanniyare

வாலிபரே கன்னியரே பாடு – உன்
வாலிபத்தில் உன் சிருஷ்டிகரைப் பாடு
எழுந்து நின்று பாடு இயேசுவுக்காய் ஆடு
முழு பெலத்தோடு பாடு
பாடு பாடு பாடு

கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்
கண்ணுக்கு கலிக்கம் போடு
மாம்ச கிரியை உன்னை ஆளாமல்
மாம்சத்தை அடக்கி ஆளு
வாலிபம் பொல்லாதது
கர்வம் நீயும் கொள்ளாதே
எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு

உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது
கலக்கத்தில் கொண்டு முடிந்திடும்
வாலிப ஜாலி போலியானது
காலியாய் உன்னை ஆக்கிடும்
காலம் இனி செல்லாது
நாட்கள் கூட வராது
இதுவே நல்ல நேரம்
தேவனைத் துதித்திடு

படிப்பில பேரு நடிப்பில ஜோரு
உலகம் போற்றும் ஹீரோதான்
இயேசு இல்லாத வாழ்க்கை கூட
சொல்வேன் நானும் ஹீரோ தான் உன்
அழகும் வீண் உன் எழிலும் வீண்
எல்லாம் மாயை மாயையே
படைத்த உன் தேவனை
இன்று நினைத்திடு


Valipare kanniyare patu un
valipaththil un sirushtikaraip patu
ezhunthu ninru patu iyesuvukkay aatu
muzhu pelaththotu patu
patu patu patu

kankalin issai unnaith thotamal
kannukku kalikkam potu
mamsa kiriyai unnai aalamal
mamsaththai atakki aalu
valipam pollathathu
karvam niyum kollathe
ezhunthu ni iyesuvukkay aatu

ulakaththin vazhkkai kuzhappamanathu
kalakkaththil kontu mutinthitum
valipa jali poliyanathu
kaliyay unnai aakkitum
kalam ini sellathu
natkal kuta varathu
ithuve nalla neram
thevanaith thuthiththitu

patippila peru natippila joru
ulakam porrum hirothan
iyesu illatha vazhkkai kuta
solven nanum hiro than un
azhakum vin un ezhilum vin
ellam mayai mayaiye
pataiththa un thevanai
inru ninaiththitu