எந்த நன்மையும் என்னில் Entha Nanmaiyum Ennil

எந்த நன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நேசிக்க
எந்த மேன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நினைக்க – 2

அழகும் இல்லை அஸ்தியும் இல்லை
ஆனாலும் என்னை நீர் அழத்தீர் – 2
படிப்பும் இல்லை பட்டமும் இல்லை
ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர் – 2

உந்தன் அன்பு உயர்ந்ததையா
உந்தன் ஞானம் சிறந்ததையா – 2

ஞானியும் அல்ல மேதையும் அல்ல
பேதையாம் என்னை தேடி வந்தீர் – 2
பெலவான் அல்ல கனவானுமல்ல
பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர் – 2

ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே
அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே – 2
வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன்
இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன் – 2


Entha Nanmaiyum Ennil Illaiyea
Deva Enaiyum Neer Nesika
Entha Menmaiyum Ennil Illaiyea
Deva Enaiyum Neer Ninaika – 2

Azhagumilai Asthiyumilai
Analum Ennai Neer Azhaither – 2
Padipilai Patayamilai
Analum Ennai Neer Pidithu Konder – 2

Undhan Anbu Uyarthathaiya
Undhan Gnanam Seirathathaiya – 2

Gnyaniyumila Methaiyula
Pedayam Ennai Thedivanther – 2
Belavan Alla Ganavanumalla
Belavenan Ennaiyum Therinthu Konder – 2

Jeevanum Umake Vazhvum Umake
Arpanam Seithen Anaithum Umake – 2
Vazhginra Varaiyil Um Puzhal Selven
Yesuvea Ummai Endrum Nesipean – 2