என்னை யாரென்று எனக்கே Ennai Yaarendru Enakke

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்

என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2 – ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் – நான்
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்

நானாய் நடந்த சில வழிகள் – இன்று
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – 2- எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் – எந்தன்
அகத்தினுள் படிந்த கறைகள் – இல்லை
நிறைகள் முற்றிலும் குறைகள்

வேண்டாம் இனி எனது விருப்பம் – ஐயா
உந்தன் வழியில் என்னை நடத்தும் – 2- இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் – அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் – புத்தி
பொருத்தும் முற்றிலும் திருத்தும்


Ennai Yaarendru Enakke Indru
Adaiyaalam Kaatineer
Verum Mann Yendru Udhirum Pullendru
Enakke Ninaivoottineer

Ennaal Mudiyum Endru Ninaithen – Enakku
Ellaam Theriyum Endru Nadandhen – 2 – Aanaal
Vazhiyile Thavari Vizhundhen – Nalla
Vazhiyaiyum Thavari Alaindhen – Naan
Tholaindhen Enbadhai Unarndhen

Naanaai Nadandha Sila Vazhigal – Indru
Veenaai Manadhirkulle Valigal – 2 – Endhan
Suyathinaal Kidaitha Siraigal – Endhan
Agathinul Padindha Karaigal – Yedhu
Niraigal Mutrilum Kuraigal

Vendaam Ini Enadhu Viruppam – Aiyaa
Undhan Vazhiyil Ennai Nadathum – 2 – Indre
Endhan Suyamadhanai Agatrum – Andru
Endhan Jeeviyamadhu Sirakkum – Buthi
Poruthum Mutrilum Thiruthum