தனிமை அல்ல இனி தனிமை அல்ல Thanimai Alla Eni Thanimai Alla

தனிமை அல்ல இனி தனிமை அல்ல
தேவன் உன்னோடு இருக்கிறார்

தனிமை அல்ல இனி தனிமை அல்ல

தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்

தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார்

பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்
ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்


Thanimai Alla Eni Thanimai Alla
Dhevan Unnodu Irukiraar

Thanimai Alla Eni Thanimai Alla

Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar
Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar
Nitchayamaai Unnai Avar Kai Vida Matar

Thaayin Karuvinilae Uruvaagum Munnae
Peyar Solli Azhithavar Marappaaro Unnai
Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar
Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar

Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar
Ullam Kaiyilae Unnai Vanainthavar
Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar