தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

தோம் தோம் தகநிதந ததிநதந
திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந
தோம் தோம் தகநிதந ததிநதந
அபிஷேக நாயகனே என்னை ஆளும்
அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே
அபிஷேக நாயகனே
உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்
இயேசு தெய்வமே
அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ
தவபுதனே சுதனே

நன்மைகள் செய்பவராய்
நானிலம் சுற்றி வந்த
நல்லவர் உம்மைப்பாட
நாவினை தந்தீர் நன்றி
கண்ணீரை துடைப்பவரே
என் கவலைகள் தீர்ப்பவரே
மண்ணின் மன்னவரே என்
மறைபொருள் ஞானவனே
பரனே பரனே பரனே

கள்ளன் என்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்ததினால்
உள்ளமே பொங்குதய்யா
நன்றி என்று சொல்லுதய்யா
சிலுவையின் நிழல் மறைவே
என் பாவம் போக்கும் பரிசுத்தரே
ஏலீமின் நீர் ஊற்றே
என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே
ஊற்றே ஊற்றே ஊற்றே

வேத பரம் பொருளே
ஓதும் மணிசுடரே
பாதம் பணிய வந்தேன்
கோடி கோடி நன்றியைய்யா
ஆவியின் அருள் நிறைவே
என் ஆனந்த கோமானே
சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
என் சேஷ்டபுத்திர நாயகனே
சுதனே சுதனே சுதனே


Thom thom thakanithana thathinathana
thinthara thom thanthininthana thiranathina
thom thom thakanithana thathinathana
apisheka nayakane ennai aalum
anpulla enthan theyvame iraimakane
apisheka nayakane
unnatha komane ivvulakam porrum
iyesu theyvame
anpukkup pirappitame en arunthava
thavaputhane suthane

nanmaikal seypavaray
nanilam surri vantha
nallavar ummaippata
navinai thanthir nanri
kannirai thutaippavare
en kavalaikal thirppavare
mannin mannavare en
maraiporul nyanavane
parane parane parane

kallan enru thallitamal
alli ennai anaiththathinal
ullame pongkuthayya
nanri enru solluthayya
siluvaiyin nizhal maraive
en pavam pokkum parisuththare
eelimin nir uurre
en thakam thirkkum jivanathiye
uurre uurre uurre

vetha param porule
oothum manisutare
patham paniya vanthen
koti koti nanriyaiyya
aaviyin arul niraive
en aanantha komane
sirushtikku sirushtikare
en seshtapuththira nayakane
suthane suthane suthane