மகிமையான தேவன் மனிதனாக Magimaiyana Devan Manidhanaaga

மகிமையான தேவன் மனிதனாக பிறந்து வந்து
மனுக்குலத்தின் பாவத்திற்காய் பலியானரே
மரித்துவிட்டார் என்று எண்ணி கல்லறையில் வைத்தாலும்
மூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2

உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரே
மூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2
உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரே
வேதவாக்கியம் நிறைவேற உயிர்தெழுந்தாரே

துரைத்தனங்கள் அதிகாரங்கள் முறிந்து போனதே
பாவ சாப நோய்களெல்லாம் பறந்து போனதே – 2
எதிரிடையாய் இருந்த எல்லா கையெழுத்தையும் துலைத்து
சிலுவையின் மேல் ஆணி அடித்து ஜெயித்தெழுந்தாரே – 2

மரணம் வந்து ஜெயமாக விழுங்கப்பட்டதையே
பாதாளத்தின் வல்லமைகள் முறிக்கப்பட்டதையே – 2
சாவுக்கு ஏதுவான சரீரத்தை உயிர்ப்பித்து
சாவாமையை தரித்து கொள்ள ஜெயித்தெழுந்தாரே – 2

புதிய ஜீவ மார்க்கத்தில் வழி பிறந்ததே
புதிய முனேஷனாக வாழ கிருபை கிடைத்ததே – 2
பாவியாக வாழ்ந்து வந்த என் வாழ்க்கையை மாற்றி
கிறிஸ்துவுக்குள் நீதியாகி ஜெயித்தெழுந்தாரே – 2


Magimaiyana Devan Manidhanaaga Pirandhu Vandhu
Manukulathin Paavathirkaai Baliyaanarae
Marithuvaitaar Endru Ennil Kallaraiyil Vaithaalum
Moondram Naal Sonnapadi Uyirthezhundhaarae – 2

Uyirthezhundhaarae Yesu Uyirthezhundhaarae
Moondram Naal Sonnapadi Uyirthezhundhaarae – 2
Uyirthezhundhaarae Yesu Uyirthezhundhaarae
Vaedhavaakiyam Niraivaera Uyirthezhundhaarae

Thuraithanangal Adhigaarangal Murindhu Ponadhae
Paava Saaba Noigalellaam Parandhu Ponadhae – 2
Edhiridaiyaai Irundha Ellaa Kaiyezhuthaiyum Thulaithu
Siluvaiyin Mael Aani Adithu Jeithezhundhaarae – 2

Maranam Vandhu Jeyamaaga Vizhungapatadhae
Paadhaalathin Vallamigal Murikappattadhae – 2
Saavuku Yaedhuvaana Sareerathai Uyirpithu
Saavaamaiyai Tharithu Kolla Jeithezhundhaarae – 2

Pudhiya Jeeva Maarkathil Vazhi Pirandhadhae
Pudhiya Munshanaaga Vaazha Kirubai Kidaithathae – 2
Paavaiyaaga Vaazhndhu Vandha En Vaazhkaiyai Maatri
Kristhuvukul Needhiyaaki Jeithezhundhaarae – 2