வழி திறக்குமே புது வழி திறக்குமே Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae

வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே

அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே
எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா

யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே
புது வழி நமக்காக திறந்திடுவாரே

கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே


Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae
Yesuvin Namathil Vazhi Thirakkumae
Vaasalgal Ellam Thalai Uyarthidungalen
Magimayin Raaja Vanthiduvaarae
Munthinathellam Ini Ninaikka Vendaamae
Puthiya Kaariyam Seithiduvaarae

Aseeriyan Karvangal Thaazhthappadumae
Sarppathin Thalaigal Ellam Udaikkappadumae
Egipthin Kodungolkal Murikkappadumae
Samuthira Aazhangal Vatri Pogumae
Egipthin Ninthaigal Ellam Neekkiduvaarae

Hallelujah Hallelujah Hallelujah
Enga Allal Ellam Neekiduvaar Hallelujah

Yorthan Pinnittu Thirumbi Pogumae
Eriko Munbathaaga Norungi Vizhumae
Parvathangal Malaigal Ellam Gemberrikkumae
Veliyin Marangal Ellam Kai Kottumae
Puthu Vazhi Namakkaga Thiranthiduvaarae

Kartharin Magimayaana Prasannathaal
Sathurukkal Mutrilumaai Norungi Povaarae
Iravil Akkini Sthambam Mega Sthambamum
Thamathu Janathin Munne Kadanthu Selvaare
Thamathu Janathin Melae Piriyam Vaithathaal
Vakkuththatha Desathukku Kondu Selvaarae