வென்றனரே நம் இயேசு Venranare Nam Yesu

வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்

சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்

தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார்

தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன்

நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார்


Venranare Nam Yesu Paran
Enrenrum Jeyiththezhunthar
Jeyame Atainthume
Iratsakaril Valaruvom

Sethamethum Nerungkita
Theva Thevan Thangkuvar
Thunpam Yavum Ningkitum
Inpam Enrum Thangkitum

Thingku Nalil Maraiththume
Sukamay Kaththu Mutuvar
Thakuntha Velai Karaththinil
Uyarththi Jeyame Nalkuvar

Thevanotu Selluven
Mathilaith Thanti Payuven
Ulakai Jeyikkum Thevanal
Yavum Jeyiththu Selluven

Nithimanai Uyarththuvar
Nithiparanam Yesuve
Saththuru Vizhnthu Azhinthita
Devan Jeyame Thanthituvar