புத்தி கெட்ட அத்தி Puththi ketta aththi

புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை
சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு
வெட்கம் தந்த அத்திமரமே

ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை
ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை உன்னில்
உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு
கட்டிக் காத்த தோட்டானுக்கு
வெட்டிபோட மனதுமில்லை புத்திக்கெட்ட

காய்ந்த மரமாக இருப்பதென்ன நீ
கனியாத மரமாக நிலைத்ததென்ன
மலடான மரமாக போனதென்ன நீ
மன்னவனின் மகிமையை இழந்ததென்ன

காய்க்கும் மரமாக இருந்திடணும் நீ
கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும்
நீரோரம் நடப்பட்ட நல் மரமாய்
பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் நீ


Puththi ketta aththi marame oo
sakthi ketta aththi marame unnai
sakthi thanthu kattikaththa muththana thottanukku
vetkam thantha aththimarame

onnam varushaththilum onnum illai
rentam varushaththilum kaniyumillai unnil
unnai mutti pottu thottu thottu
kattik kaththa thottanukku
vettipota manathumillai puththikketta

kayntha maramaka iruppathenna ni
kaniyatha maramaka nilaiththathenna
malatana maramaka ponathenna ni
mannavanin makimaiyai izhanthathenna

kaykkum maramaka irunthitanum ni
kani thanthu thevanukkay vazhnthitanum
niroram natappatta nal maramay
puththuk kayththu ni kulungkitanum ni