வாலிபரே கன்னியரே Valipare kanniyare

வாலிபரே கன்னியரே பாடு – உன்
வாலிபத்தில் உன் சிருஷ்டிகரைப் பாடு
எழுந்து நின்று பாடு இயேசுவுக்காய் ஆடு
முழு பெலத்தோடு பாடு
பாடு பாடு பாடு

கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்
கண்ணுக்கு கலிக்கம் போடு
மாம்ச கிரியை உன்னை ஆளாமல்
மாம்சத்தை அடக்கி ஆளு
வாலிபம் பொல்லாதது
கர்வம் நீயும் கொள்ளாதே
எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு

உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது
கலக்கத்தில் கொண்டு முடிந்திடும்
வாலிப ஜாலி போலியானது
காலியாய் உன்னை ஆக்கிடும்
காலம் இனி செல்லாது
நாட்கள் கூட வராது
இதுவே நல்ல நேரம்
தேவனைத் துதித்திடு

படிப்பில பேரு நடிப்பில ஜோரு
உலகம் போற்றும் ஹீரோதான்
இயேசு இல்லாத வாழ்க்கை கூட
சொல்வேன் நானும் ஹீரோ தான் உன்
அழகும் வீண் உன் எழிலும் வீண்
எல்லாம் மாயை மாயையே
படைத்த உன் தேவனை
இன்று நினைத்திடு


Valipare kanniyare patu un
valipaththil un sirushtikaraip patu
ezhunthu ninru patu iyesuvukkay aatu
muzhu pelaththotu patu
patu patu patu

kankalin issai unnaith thotamal
kannukku kalikkam potu
mamsa kiriyai unnai aalamal
mamsaththai atakki aalu
valipam pollathathu
karvam niyum kollathe
ezhunthu ni iyesuvukkay aatu

ulakaththin vazhkkai kuzhappamanathu
kalakkaththil kontu mutinthitum
valipa jali poliyanathu
kaliyay unnai aakkitum
kalam ini sellathu
natkal kuta varathu
ithuve nalla neram
thevanaith thuthiththitu

patippila peru natippila joru
ulakam porrum hirothan
iyesu illatha vazhkkai kuta
solven nanum hiro than un
azhakum vin un ezhilum vin
ellam mayai mayaiye
pataiththa un thevanai
inru ninaiththitu