ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே
- கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) — ஏழை - அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) — ஏழை - அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் — ஏழை - மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் — ஏழை - இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே — ஏழை
Aelai Manu Uruvai Eduththa Lyrics in English
aelai manu uruvai eduththa
Yesu raajan unnanntai nirkiraar
aettukkol avaraith thallaathae
- kaikalil kaalkalil aannikal kadaava
kadum mul muti pon sirasil sootida
kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar
sonthamaana iraththam sinthinaar unakkaay
kanivudan unnai alaikkiraarae (2) — aelai - avar thalaiyum saaykka sthalamumillai
antu thaakaththaith theerkkavo paanamumillai
aaruthal sollavo angae oruvarillai
arumai iratchakar thongukiraar thaniyae
anthap paadukal unnai meetkavae (2) — aelai - avar maranaththaal saaththaanin thalai nasunga
avar raththaththaal paavak karaikal neenga
unthan viyaathiyin vaethanaiyum oliya
neeyum saapaththinintu viduthalai ataiya
siluvaiyil jeyiththaar yaavaiyum — aelai - maayai ulakam athaiyum nampaathae
manumakkal manamum maarip pokumae
niththiya thaevanai naesiththaal ippothae
nichchayam santhosham pettu nee makila
nampikkaiyotae vanthiduvaay — aelai - innamum thamatham unakkaen makanae
inpa Yesuvanntai elunthu vaaraayo
intha ulakam tharakkoodaa samaathaanaththai
intu unakkuth tharak kaaththu nirkiraarae
annnal Yesunnai alaikkiraarae — aelai
Leave a Reply
You must be logged in to post a comment.