Author: admin

  • Natha Um Thirukarathil நாதா உம்திருக் கரத்தில்

    நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
    நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

    1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
      அனுதினம் ஓடி வந்தேன்
      ஆனந்தமே ஆனந்தமே – 2
    2. எங்கே நான் போக உம் சித்தமோ
      அங்கே நான் சென்றிடுவேன்
      உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
    3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
      பரவசமாகிடுவேன்
      எக்காளம் நான் ஊதிடுவேன்
    4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
      துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
      கிருபை ஒன்றே போதுமைய்யா
    5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
      உம் நாமம் உயர்த்திடுவேன்
      சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

    Natha Um Thirukarathil Lyrics in English

    naathaa umthiruk karaththil isaikkaruvi naan
    naalthorum payanpaduththum unthan siththam pol

    1. aiyaa um paatham en thanjamae
      anuthinam oti vanthaen
      aananthamae aananthamae – 2
    2. engae naan poka um siththamo
      angae naan sentiduvaen
      um naamaththil jeyam eduppaen
    3. puthuppaadal thanthu aaseervathiyum
      paravasamaakiduvaen
      ekkaalam naan oothiduvaen
    4. ninthaikal nerukkam thunpangalil
      thuthi paati makilnthiruppaen
      kirupai onte pothumaiyyaa
    5. oorellaam selvaen paraisaattuvaen
      um naamam uyarththiduvaen
      saaththaan kottaை thakarththiduvaen
  • Natha Natha Intha Jeeviyam நாதா நாதா நாதா

    நாதா.. நாதா.. நாதா…
    இந்த ஜீவியமே வெறும் மாயையோ
    இது சஞ்சலம் நிறைந்ததோ

    காரிருள் சூழும் நேரமதில்- என்
    கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
    மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
    ஆதரவே என் தேற்றரவாளனே
    உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
    வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா

    நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
    வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
    என் கன்மைலையே என் அடைக்கலமே
    தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
    நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
    உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா


    Natha natha intha jeeviyam Lyrics in English

    naathaa.. naathaa.. naathaa…
    intha jeeviyamae verum maayaiyo
    ithu sanjalam nirainthatho

    kaarirul soolum naeramathil- en
    karam pitiththennai nadaththiya naathan
    maaraavin mathuramaam irulil velichchamaam
    aatharavae en thaettaravaalanae
    um kirupaiyanti yaathontumiyalaen
    vanaanthirap paathaiyil aaruyir naathaa

    ninthaikal palikal perukidum pothu
    vaakkuththaththam thanthu nadaththidum naathan
    en kanmailaiyae en ataikkalamae
    thakarntha en jeeviyam vanaintha en paranae
    neer allaal aasai ippoovinil illai
    ummil naan saaruvaen ententum naathaa

  • Natchaththiram Natchaththiram Natchaththiram நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

    நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
    ஒழி வீசும் நட்சத்திரம் } 2
    வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்
    விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம்

    1. இயேசு பாலனை கண்டிடவே
      சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2
      அது ஜொலித்திடும் நட்சத்திரம் — நட்சத்திரம்
    2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்
      மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2
      அது மின்னிடும் நட்சத்திரம் — நட்சத்திரம்
    3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம்
      மெய் வழி காண உதவிடுவோம் } 2
      நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் – நட்சத்திரம்

    ஒழி வீசும் நட்சத்திரம் (4)


    Natchaththiram Natchaththiram Natchaththiram Lyrics in English

    natchaththiram natchaththiram natchaththiram
    oli veesum natchaththiram } 2
    vali kaattum natchaththiram irul neekkum natchaththiram
    vitivelli natchaththiram oru ataiyaala natchaththiram – natchaththiram

    1. Yesu paalanai kanntidavae
      saasthrikalukku vali kaattiyathae } 2
      athu joliththidum natchaththiram — natchaththiram
    2. irulil irukkum maantharkkellaam
      mey oli Yesuvai kanntidavae } 2
      athu minnidum natchaththiram — natchaththiram
    3. theyva anpinaik kooriduvom
      mey vali kaana uthaviduvom } 2
      naam pirakaasippom natchaththiramaay – natchaththiram

    oli veesum natchaththiram (4)

  • Natchathiram Vanthathu நட்சத்திரம் வந்தது

    நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
    உலகில் வெளிச்சம் தந்தது
    வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
    வாழ்க்கையிலே ஒளி தந்தது

    இம்மானுவேல் தேவனை
    மண்ணில் வந்த வேந்தனை
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
    தேவனை மண்ணில் வந்த ராஜனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    உயிரை தந்த தேவனே
    உயிரோடு கலந்த தேவனே

    அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
    இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்


    Natchathiram vanthathu Lyrics in English

    natchaththiram vanthathu vaanil uthiththelunthathu
    ulakil velichcham thanthathu
    vaalkkaiyilae vanthathu valikaatta vanthathu
    vaalkkaiyilae oli thanthathu

    immaanuvael thaevanai
    mannnnil vantha vaenthanai
    makilvudan paadiduvaen naan thaevaathi
    thaevanai mannnnil vantha raajanai
    vaalnaalellaam paadiduvaen naan

    uyirai thantha thaevanae
    uyirodu kalantha thaevanae

    anpaana thaevanae aaruyir nannpanae
    makilvudan paadiduvaen naan
    ivvulaka raajanai eekaiyin mannanai
    vaalnaalellaam paadiduvaen naan

  • Natanthathellaam Nanmaikkae நடந்ததெல்லாம் நன்மைக்கே

    நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி

    1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
      துன்பங்களை இன்பமாக மாற்றினீர் – நன்றி
    2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
      சிந்தைதனை மாற்றினீர் நன்றி
    3. உள்ளான மனிதனை புதிதாக்கி
      உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
    4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
      பெலவீனத்திலே பெலன் என்றீர்
    5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
      தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி
    6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
      பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
    7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
      மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

    Natanthathellaam Nanmaikkae Lyrics in English

    nadanthathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae
    nadappathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae
    nanti (2) ellaam nanmaikkae nanti

    1. theemaikalai nanmaiyaaka maattineer
      thunpangalai inpamaaka maattineer – nanti
    2. siluvaithanai anumathiththeer nanti
      sinthaithanai maattineer nanti
    3. ullaana manithanai puthithaakki
      utaiththu urumaatti nadaththukireer
    4. en kirupai unakkup pothum enteer
      pelaveenaththilae pelan enteer
    5. thaangidum pelan thantheer nanti
      thappich sella vali seytheer nanti
    6. visuvaasappudamittir nanti
      ponnaaka vilangach seytheer nanti
    7. kasappukkalai maatti vittir nanti
      mannikkum manam thantheer nanti
  • Natanamaati Sthoeththarippaen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

    நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
    நாதா நான் உம்மைத் துதிப்பேன்
    கைத்தாள ஓசையுடன்
    கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா

    1. காண்பவரே காப்பவரே
      கருணை உள்ளவரே
      காலமெல்லாம் வழி நடத்தும்
      கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
    2. வல்லவரே நல்லவரே
      கிருபை உள்ளவரே
      வரங்களெல்லாம் தருபவரே
      வாழ்வது உமக்காக – ஐயா
    3. ஆண்டவரே உம்மைப்
      பிரிந்து யாரிடத்தில் போவோம்
      வாழ்வு தரும் வசனமெல்லாம்
      உம்மிடம்தான் உண்டு – ஐயா
    4. அற்புதமே அதிசயமே
      ஆலோசனைக் கர்த்தரே
      அண்டி வந்தோம் ஆறுதலே
      அடைக்கலமானவரே

    Natanamaati Sthoeththarippaen Lyrics in English

    nadanamaati sthoththarippaen
    naathaa naan ummaith thuthippaen
    kaiththaala osaiyudan
    karththaa naan ummaith thuthippaen – allaelooyaa

    1. kaannpavarae kaappavarae
      karunnai ullavarae
      kaalamellaam vali nadaththum
      kanmalaiyae sthoththiram – aiyaa
    2. vallavarae nallavarae
      kirupai ullavarae
      varangalellaam tharupavarae
      vaalvathu umakkaaka – aiyaa
    3. aanndavarae ummaip
      pirinthu yaaridaththil povom
      vaalvu tharum vasanamellaam
      ummidamthaan unndu – aiyaa
    4. arputhamae athisayamae
      aalosanaik karththarae
      annti vanthom aaruthalae
      ataikkalamaanavarae
  • Narpathu Naal Raapagal நாற்பது நாள் ராப் பகல்

    1. நாற்பது நாள் ராப் பகல்
      வனவாசம் பண்ணினீர்;
      நாற்பது நாள் ராப் பகல்
      சோதிக்கப்பட்டும் வென்றீர்.
    2. ஏற்றீர் வெயில் குளிரை
      காட்டு மிருகத் துணை;
      மஞ்சம் உமக்குத் தரை,
      கல் உமக்குப் பஞ்சணை.
    3. உம்மைப்போல நாங்களும்
      லோகத்தை வெறுக்கவும்,
      உபவாசம் பண்ணவும்
      ஜெபிக்கவும் கற்பியும்.
    4. சாத்தான் சீறி எதிர்க்கும்
      போதெம் தேகம் ஆவியை
      சோர்ந்திடாமல் காத்திடும்,
      வென்றீரே நீர் அவனை.
    5. அப்போதெங்கள் ஆவிக்கும்
      மா சமாதானம் உண்டாம்;
      தூதர் கூட்டம் சேவிக்கும்
      பாக்கியவான்கள் ஆகுவோம்.

    Narpathu Naal Raapagal Lyrics in English

    1. naarpathu naal raap pakal
      vanavaasam pannnnineer;
      naarpathu naal raap pakal
      sothikkappattum venteer.
    2. aettaீr veyil kulirai
      kaattu mirukath thunnai;
      manjam umakkuth tharai,
      kal umakkup panjannai.
    3. ummaippola naangalum
      lokaththai verukkavum,
      upavaasam pannnavum
      jepikkavum karpiyum.
    4. saaththaan seeri ethirkkum
      pothem thaekam aaviyai
      sornthidaamal kaaththidum,
      venteerae neer avanai.
    5. appothengal aavikkum
      maa samaathaanam unndaam;
      thoothar koottam sevikkum
      paakkiyavaankal aakuvom.
  • Narkarunai Naadhane Sarguruve நற்கருணை நாதனே

    நற்கருணை நாதனே
    சற்குருவே அருள்வாய் பொறுமை (2)

    1. கோதுமை கனிமணி போல்
      தீ திலோர் குண நலன்கள்
      யோக்கியமாய் சேர்ந்திடவே
      தூயனே அருள் மழை பொழிவாய் (2)
    2. திராட்சை கனி ரசமே
      தெய்வீக பானமதாம்
      பொருளினில் மாறுதல் போல்
      புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)
    3. சுவை மிகு தீங்கனியே
      திகட்டாத தேன் சுவையே
      தித்திக்கும் கிருபையினாலெ
      எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
    4. தேடி வந்தவரே
      தினம் உனதன்பாலே
      தாய் மனம் போல் அருளி
      தாரணி செழித்தோங்கிடவே (2)

    Narkarunai Naadhane Sarguruve Lyrics in English

    narkarunnai naathanae
    sarkuruvae arulvaay porumai (2)

    1. kothumai kanimanni pol
      thee thilor kuna nalankal
      yokkiyamaay sernthidavae
      thooyanae arul malai polivaay (2)
    2. thiraatchaை kani rasamae
      theyveeka paanamathaam
      porulinil maaruthal pol
      puvikku oru puthu mukam nalkiduvaar (2)
    3. suvai miku theenganiyae
      thikattatha thaen suvaiyae
      thiththikkum kirupaiyinaale
      engalai maarpinil annaiththu kolvaar (2)
    4. thaeti vanthavarae
      thinam unathanpaalae
      thaay manam pol aruli
      thaaranni seliththongidavae (2)
  • Narkani Thaetitum Nallaantavaa நற்கனி தேடிடும் நல்லாண்டவா

    நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள்

    1. நற்கனி தேடிடும் நல்லாண்டவா
      நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
      வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
      வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும்
    2. மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
      கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
      எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
      தப்பாது கனிதர அருள் தந்திடும்
    3. உம்பணி செய்திட கனி கொடுக்க
      எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
      உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
      உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும்
    4. தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
      தியானித்து உம்மோடு உறவாடவே
      திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
      தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும்
    5. என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்
      ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
      இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
      ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும்

    Narkani Thaetitum Nallaantavaa Lyrics in English

    nilaiththirungal-kanikodungal

    1. narkani thaedidum nallaanndavaa
      naanoru paalmaram ennaip paarum
      vaalnaalai veennaalaayk kaliththittaenae
      varunthum ippaaviyaik kannnnokkidum
    2. meyyaana thiraatchaைch seti Yesuvae
      kotiyaaka innainthitta ennaip paarum
      eppothum ummil naan nilaiththirukka
      thappaathu kanithara arul thanthidum
    3. umpanni seythida kani kodukka
      emmai neer alaiththittir therinthu konnteer
      um vaakkai ennil neer niraivaettidum
      um siththam niraivaetti uthaviseyyum
    4. thinanthorum vaethaththai virumpidavae
      thiyaaniththu ummodu uravaadavae
      thiralaaka umakkontu kanikodukka
      thinanthorum ennai neer suththam seyyum
    5. ennai naan pataiththittaen palipeedaththil
      aettu neer eduththaanndu vali nadaththum
      iruthiyil ummukam tharisikkavae
      aelaiyaam enakku neer arul thanthidum
  • Narampu Kooda Yesuvukku Nanti Solluthu நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது

    நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது
    என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது
    வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது
    என் உயிரே இயேசுவே என்று சொல்லுது

    கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது
    என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது
    என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது
    என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது

    என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது
    தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது
    என் இருதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது
    என் உறவே என் மறைவிடமே என்று சொல்லுது

    ஜீவன் தந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
    என் ஆவி ஆத்மா சரீரம் முழுதும் அர்ப்பணிக்கிறேன்
    இலக்கை நோக்கி ஜீவ பயணம் தொடர்ந்து ஓடுவேன்
    பரிசுத்தமாய் வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்

    கோடி கோடி நன்மை சொல்லி பாடுவேன்
    எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்

    கோடி கோடி ஸ்தோத்திரங்கள் சொல்லி பாடுவேன்
    எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்


    Narampu Kooda Yesuvukku Nanti Solluthu Lyrics in English

    narampu kooda Yesuvukku nanti solluthu
    en elumpu kooda Yesuvukkaay nimirnthu nirkuthu
    vayitru kooda Yesuvukkaay pasiyai thaanguthu
    en uyirae Yesuvae entu solluthu

    kannnneerodu kannkal avarai Nnokkip paarkkuthu
    entum nanmai seytha nallavarkku nanti solluthu
    en mulangaalkal manntiyittu thinamum jepikkuthu
    en kannnneer jepam thaevan kaetpaar thaevan namputhu

    en aaththumaa karththarukkaay kaaththirukkuthu
    thinam naerththiyaaka sthoththirangal solli makiluthu
    en iruthayamo iravum pakalum viliththirukkuthu
    en uravae en maraividamae entu solluthu

    jeevan thantha thaevanukku nanti solluvaen
    en aavi aathmaa sareeram muluthum arppannikkiraen
    ilakkai Nnokki jeeva payanam thodarnthu oduvaen
    parisuththamaay vaalnthu thaeva ooliyam seyvaen

    koti koti nanmai solli paaduvaen
    enakku nanmai seytha thaevanaiyae potti paaduvaen

    koti koti sthoththirangal solli paaduvaen
    enakku nanmai seytha thaevanaiyae potti paaduvaen