Author: admin

  • உயிரே உயிரே என்னை Uyirae Uyirae Ennai

    உயிரே உயிரே என்னை
    கவர்ந்த மணவாளரே -2

    உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
    வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே -2 – உயிரே

    கை பிடித்தவர் நீர் கைவிடுவதில்லை
    வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – 2

    நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காகத்தான்
    என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காகத்தான் – 2


    Uyirae Uyirae Ennai
    Kavarndha Manavaalanae – 2

    Ummodu Vaazhum Oru Naal Podhum
    Vaerondrum Vendam En Vaazhvinilae – 2 – Uyirae

    Kai Pidithavar Neer Kai Viduvadhillai
    Vaakalithavar Neer Vaaku Marapadhillai – 2

    Naan Uyir Vazhndhaal Adhu Ummakaga Dhan
    En Uyir Pirindhallum Adhu Ummakaga Dhan – 2


  • உடைந்து போன என்னை Udaindhu Pona Ennai

    உடைந்து போன என்னை
    உருவாக்கிட கூடும்
    தள்ளப்பட்ட என்னை
    தலைவனை ஆகிட கூடும்

    என் தேவனால்
    கூடாதது ஒன்றுமில்லை – 4

    சிறியவனை ஆயிரமாய்
    மாற்றிட கூடும்
    எளியவனை சேற்றிலிருந்து
    தூக்கிட கூடும்

    கண்கள் காணா அற்புதங்கள்
    செய்திட கூடும்
    என் வேண்டுதல்கள் எல்லாம்
    நிறைவேற்றிட கூடும்


    Udaindhu Pona Ennai
    Uruvaakida Koodum
    Thallappatta Ennai
    Thalaivan Aakida Koodum

    En Dhevanaal
    Koodadhathu Ondrumillai – 4

    Siriyavanai Aayiramaai
    Maatrida Koodum
    Eliyavanai Saettrilirundhu
    Thookida Koodum

    Kangal Kaanaa Arputhangal
    Seidhida Koodum
    En Venduthalgal Ellaam
    Niraivetrida Koodum


  • பரிசுத்த பரந்தாமனே Parisutha Parandhamanae

    பரிசுத்த பரந்தாமனே
    மகிமையின் மகாராஜனே
    வல்லமையானவரே
    அக்கினி அணலும் நீரே – 2

    என்மேல் இறங்குமைய்யா
    உம் ஆவியை ஊற்றுமைய்யா
    என் நிலமையை மாற்றுமைய்யா
    என் வாழ்வை தேற்றுமைய்யா – 2

    ஆவியே ஆவியே
    ஆராதிப்பேன் ஆவியே
    ஆவியே ஆவியே
    பரிசுத்தத்தின் ஆவியே

    வற்றாத நதியாகவே
    என் உள்ளத்தில் தங்கிடவே
    நான் உம்மோடு கலந்திடவே
    நீர் என்னில் பெருகிடவே – 2


    Parisutha Parandhamanae
    Magimaiyin Maagaraajanae
    Valamaiyanavare
    Akkini Analum Neerae -2

    Enmael Erungum Aiyya
    Um Aaviyai Ootrum Aiyya
    En Nilamaiyai Maatrum Aiyya
    En Vazhvai Thaetrum Aiyya -2

    Aaviyae Aaviyae
    Aaradhipaen Aaviyae
    Aaviyae Aaviyae
    Parisuthathin Aaviyae

    Vatradha Nadhiyagavae
    En Ulathil Thangidavae
    Naan Ummodu Kalanthidavae
    Neer Ennil Perugidavae -2


  • இயேசுவே உம்மை Yesuvae Ummai

    இயேசுவே உம்மை போல தேவனும் யாருமில்லை
    பாவியை மீட்ட எந்தன் ராஜா
    கண்ணீரைத் துடைத்தீரே காயங்கள் ஆற்றினீரே
    எந்நாளும் நீரே எந்தன் ராஜா

    எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே
    உம்மை தொடரும் ஆட்டுக்குட்டி நானே
    விண்ணைத் தாண்டி வந்தவர் நீரே
    என்னை கொண்டு சென்றிடுவீரே
    எந்நாளும் உம்மோடு ஆடுவேன்
    எந்நாளும் உம்மை நான் பாடுவேன்

    நன்றி சொல்லி நன்றி சொல்லி
    நன்றி சொல்லி ராஜனை போற்றுவேன்

    பாதை மாறி தவறிய போதும்
    பாதைக் காட்ட வந்தவர் நீரே
    பாசத்திற்காய் ஏங்கினபோதும்
    பாசம் காட்டி அணைத்தவர் நீரே


    Yesuvae Ummai Pol Dhevanum Yarumila
    Paaviyai Meta Endhan Raja
    Kanerai Thudaitherae Kayangal Aatrinerae
    Enalum Neerae Endhan Raja

    Endhan Nala Meiparum Neerae
    Ummai Thodarum Atukuty Naane
    Vinaithandi Vandhavar Neerae
    Ennai Kondu Sendriduverae
    Enalum Ummodu Aduven
    Enalum Ummai Naan Paduven

    Nandri Solli Nandri Solli
    Nandri Solli Rajanai Potruven

    Padhai Mari Thavariya Podhum
    Padhai Kata Vandhavar Neerae
    Pasathukai Yengiya Podhum
    Pasam Kati Anaithavar Neerae


  • நான் நிற்கும் பூமி Naan Nirkum Boomi

    நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – 2
    நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4

    என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – 2
    என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4


    Naan Nirkum Boomi Nilaikulaindhu Azhindhaalum
    En Nambikkaiyin Asthibaaram Asaindhaalum – 2
    Naan Nambuvadharku Ondrumillai Endraalum
    Nambuvaen En Yaesu Oruvarai – 2

    Nambuvaen En Yaesu Oruvarai – 4

    En Paadhai Ellaam Andhagaaram Soozhndhaalum
    Vaazhkai Mudindhadhu Maruvaazhvu Illai Endraalum – 2
    Ennai Thaetruvadharku Yaarumillai Endraalum
    Nambuvaen En Yaesu Oruvarai – 2

    Nambuvaen En Yaesu Oruvarai – 4


  • ஜெபிக்க மறந்த Jebikka Marandha

    ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
    வேதம் வாசிக்க மறந்த போதும்
    என் அப்பா நீங்க
    துரோகம் செய்ஞ்ச போதும் என் அப்பா நீங்க
    பாவம் செய்ஞ்ச போதும் என் அப்பா நீங்க

    அப்பா நீங்க இயேசு நீங்க
    அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க

    என்னை கையில் ஏந்தி செல்லும்
    இயேசு அப்பா நீங்க
    என்னை தோளில் சுமந்து செல்லும்
    அன்பு அப்பா நீங்க
    நான் விழுந்து போதும் தூக்கின
    என் அப்பா நீங்க
    யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும்
    அப்பா நீங்க

    அப்பா நீங்க இயேசு நீங்க
    அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க


    Jebikka Marandha Podhum En Appa Neenga
    Vedham Vasikka Marantha Podhum
    En Appa Neenga
    Dhrogam Seinja Pothum En Appa Neenga
    Paavam Seinja Pothum En Appa Neenga

    Appa Neenga Yesappa Neenga
    Appa Neenga Enakkellam Neenga – 2

    Ennai Kayil Yendhi Sellum
    Yesu Appa Neenga
    Ennai Thozhlil Sumandhu Sellum
    Anbu Appa Neenga
    Naan Vizhundhu Podhum Thukina
    En Appa Neenga
    Yaar Vaeruthalum Saerthukolum
    Appa Neenga

    Appa Neenga Yesappa Neenga
    Appa Neenga Enakkellam Neenga – 4


  • என்னை மீட்க Ennai Meetka

    என்னை மீட்க வந்தீரே
    எனக்காக ஜீவன் தந்தீரே
    உம்மை போல தேவன் இல்லையே
    இரத்தம் சிந்தி மீட்டீரே
    பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
    சிலுவையின் சுதந்திரம் நீரே…யேசுவே

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2

    உலகத்தை ஜெயித்தீரே
    ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
    உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே
    எக்காளம் முழங்கிட
    மோட்சக்கரையில் என்னை சேர்த்திட
    வானிலே பவனி வருவீரேயேசுவே

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2

    ஓ..என் தேவனே
    என் ராஜனே
    என்னை மீட்டு கொண்டீரே – 2

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2


    Ennai Meetka Vantheerae
    Enakaaga Jeevan Thantheerae
    Ummai Pola Dhevan Illayae
    Irattam Sindhi Meeterae
    Paava Baaram Sumanthu Thirtheerae
    Siluvaiyin Sudhanthiram Neerae…Yeasuvae

    Oh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Oh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2

    Ulagathai Jaitheerae
    Jeeva Kiridam Enaku Kodutheerae
    Undhan Mahimaiyil Serthukolveerae
    Ekkaalam Muzhangida
    Motchakaraiyil Ennai Serthida
    Vaanilae Bavani Varuveerae Yeasuvae

    Ohh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Ohh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2

    Oh..En Dhevanae
    En Rajanae
    Ennai Meetu Kondirae – 2

    Oh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Oh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2


  • என் வாழ்வின் En Nambikkaiyin

    என் நம்பிக்கையின் காரணர் நீரே
    என் வாழ்வின் அர்த்தம் நீரே
    என்னை ஆழுகை செய்பவர் நீரே
    உம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2

    உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
    ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2

    முதலும் நீரே முடிவும் நீரே
    துவங்கியதை முடிப்பவர் நீரே – 2
    கடலின் மேல் நடந்து
    கரை சேர்ப்பவரும் நீரே – 2

    சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
    வாக்கு மாறா உத்தமர் நீரே – 2
    கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
    செவி கொடுப்பவரும் நீரே – 2


    En Nambikkaiyin Kaaranar Neerae
    En Vaazhvin Arththam Neerae
    Ennai Aalugai Seibavar Neerae
    Ummai Pugazhndhu Paadiduvenae – 2

    Ummai Aaradhippaen Aarpparippaen
    Aayulvari Ummai Sthotharippaen – 2

    Mudhalum Neerae Mudivum Neerae
    Thuvangiyadhai Mudippavar Neerae – 2
    Kadalinmele Nadandhu
    Karaiserpavarum Neerae – 2

    Sonnadhai Seiyyum Unnadhar Neerae
    Vaakku Maara Uththamar Neerae – 2
    Kooppitta Neraththilellaam
    Sevikoduppavarum Neerae – 2


  • என் கன்மலை நீரே En Kanmalai Neerae

    என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானே
    காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2

    உம் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுபவர் நீரே
    கோணல்களை செவ்வையாக
    மாற்றுபவர் நீரே – 2

    ஆடிடுவேன் பாடிடுவேன்
    அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2

    நெருக்கத்திலே இருந்த என்னை
    கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
    நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
    விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
    என்னை பாதுகாப்பீர் – 2

    புழுதியிலே இருந்த என்னை
    புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
    தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
    உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2


    En Kanmalai Neerae Um Kannin Mani Naanae
    Kaathiduveerae Endendrum Neerae – 2

    Um Kannaivaiththu
    Aalosanai Sollubavar Neerae
    Konalgalai Sevvaiyaaga
    Maattrubavar Neerae – 2

    Aadiduvaen Paadiduvaen
    Alleluya Solli Thuthithiduvaen – 2

    Nerukkaththilae Irundha Ennai
    Kooppitta Neraththil Bathil Koduththeer – 2
    Naan Ummaivittu Sendraalum Ennai
    Vida Maatteer Undhan Ullangkayyil Vaiththu
    Endrum Paadhu Kaappeer – 2

    Puzhudhiyilae Irundha Ennai
    Pughalidam Koduththu Uyarththineerae – 2
    Thallappatta Ennai Neer Thalaiyaakkineerae
    Undhan Perai Thandhu Um Pillaiyaakkineerae – 2


  • உனக்காகவும் எனக்காகவும் Unakagavum Enakagavum

    உனக்காகவும் எனக்காகவும்
    பிறந்தநேரம் இம்மானுவேல்
    மரித்தார் அவர் உயிர்த்த அவர்
    மரணத்தையும் ஜெயித்தார் அவர்

    இயேசு ராஜன் ஓ…(3) ஜீவிக்கிறார்

    பாவத்தில் நான் வாழ்த்தேனே
    சேற்றில் நான் விழுந்தேனே
    இரதம் சிந்தி மீட்டீரே
    என் இயேசு மரணத்தை ஜெயித்தீரே – 2
    உம்மை போல தேவன் தேவன் – 3
    எங்கும் இல்லையே

    வழி தவறி திரிந்தேனே
    தள்ளாடி நான் நடந்தேனே
    யாரும் என்னோடில்லையே ஆனால்
    இயேசு என்னோடிருந்தாரே – 2
    என்னோடிருக்கும் இயேசு (3)
    உன்னோடிருப்பார்

    பெயர் சொல்லி அழைத்தீரே
    கருவில் என்னை நினைத்தீரே
    அதிகாரம் கொடுத்தீரே
    யுத்தத்தை எனக்காய் ஜெயித்தீரே – 2
    சேனைகளின் கர்த்தர் கர்த்தர் (3)
    என்றும் என்னோடு


    Unakagavum Enakagavum
    Pirandhaneram Imanuvel
    Maritharavar Uyirtharavar
    Maranathaiyum Jeitharavar

    Yesu Rajan Ohh…(3) Jeevikirar

    Pavathil Naan Vazhdhenae
    Setril Naan Vilundhenae
    Ratham Sindhi Metirae
    En Yesu Maranathai Jeitherae – 2
    Ummai Pola Dhevan Dhevan – 3
    Engum Illaiyea

    Vazhi Thavri Thirindhenae
    Thaladi Naan Nadandhenae
    Yarum Enodillaiyea Aanal
    Yesu Enodirundharea – 2
    Enodirukum Yesu (3)
    Unodirupar

    Peyar Soli Alaitherae
    Karuvil Ennai Ninaitherae
    Aadhigaram Kodutherae
    Yuthathai Enakai Jeitherae – 2
    Senaigalin Karthar Karthar (3)
    Endrum Enodu