Author: admin

  • Madhura geetham மதுரகீதம்

    மதுரகீதம் பாடிடுவோம்
    மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
    ஆனந்தமாக கீதங்கள் பாடி
    ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

    வானங்கள் மேலாக உயர்ந்தவரை
    வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்
    இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்
    வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்

    தூதர்கள் போற்றும் தேவன் நீரே
    தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
    தாகம் தீர்க்கும் ஜீவஊற்று
    தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்

    மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
    மரணத்தை ஜெயமாக வென்றவரே
    மன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்
    மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்


    Madhura geetham Lyrics in English

    mathurageetham paadiduvom
    mannan Yesuvin naamaththaip pottiduvom
    aananthamaaka geethangal paati
    aanndavar naamaththai uyarththiduvom

    vaanangal maelaaka uyarnthavarai
    vaalththip pukalnthu thuthiththiduvom
    Yesuvae vaarum vaanjai theerum
    vaarththaiyaip paesum vallamai thaarum

    thootharkal pottum thaevan neerae
    theengaொntum seyyaa raajan neerae
    thaakam theerkkum jeevaoottu
    thammidam varuvorai thallaatha naesar

    maantharkal pottum raajan neerae
    maranaththai jeyamaaka ventavarae
    mannippai alippeer maantharai meetpeer
    maruroopamaakki makimaiyil serppeer

  • Maattu Thozhuvil Kanthai Pothinthu மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

    மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து
    தேவ மைந்தன் உறங்குகின்றார்
    ஆரிரோ பாடியே தூதர்கள் யாவரும்
    மகிழ்வாய் சுதனை பணிந்தனரே

    1. சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்
      காடுமேடாய் ஓடி அலைந்தன்ரே
      பிஞ்சு உருவம் மஞ்சம் கொள்ளவே
      கொஞ்சம் இடமும் தருவாரில்லை
    2. ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்
      மரியின் மகனாய் பிறந்தனரே
      ஏசு என்னும் ஓர் நாமத்திற்கிணையாய்
      வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை
    3. பாவியாய் எம்பாவம் போக்கவே பாரினில்
      பாலகன் இப்புவி வந்தனரே
      மரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்
      ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம்.

    Maattu Thozhuvil Kanthai Pothinthu Lyrics in English

    maattuth tholuvil kanthai pothinthu
    thaeva mainthan urangukintar
    aariro paatiyae thootharkal yaavarum
    makilvaay suthanai panninthanarae

    1. saththiram thaetiyae thanthaiyum thaayumaay
      kaadumaedaay oti alainthanrae
      pinju uruvam manjam kollavae
      konjam idamum tharuvaarillai
    2. aelmaiyin kolamaay thaalmaiyin uruvaay
      mariyin makanaay piranthanarae
      aesu ennum or naamaththirkinnaiyaay
      vaeroru naamam ivvulakil illai
    3. paaviyaay empaavam pokkavae paarinil
      paalakan ippuvi vanthanarae
      mariththu uyirththu jeyiththa iratchakar
      aesuvae umpaatham thanjamenpom.
  • Maatchimayae thozhugirom மாட்சிமையே தொழுகிறோம்

    மாட்சிமையே தொழுகிறோம்
    மங்காத ஒளி விளக்கே – எங்கள்

    எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
    கனத்திற்கு உரியவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    நல்லவரே, வல்லவரே
    பரிசுத்தரே, படைத்தவரே
    உயர்ந்தவரே, உன்னதரே
    பரிகாரியே, பரிசுத்தரே
    உந்தன் நாமத்திற்கே
    மகிமை செலுத்துகிறோம்
    மகிமையே மகிமையே
    மாட்சிமை உமக்குத்தானே
    துதியும் கனமும்
    வல்லமை என்றென்றுமே


    Maatchimayae thozhugirom Lyrics in English

    maatchimaiyae tholukirom
    mangaatha oli vilakkae – engal

    engal maatchimaiyae tholukirom
    kanaththirku uriyavarae
    ummaiyae aaraathippaen

    nallavarae, vallavarae
    parisuththarae, pataiththavarae
    uyarnthavarae, unnatharae
    parikaariyae, parisuththarae
    unthan naamaththirkae
    makimai seluththukirom
    makimaiyae makimaiyae
    maatchimai umakkuththaanae
    thuthiyum kanamum
    vallamai ententumae

  • Maatchimai Nirainthavarae மாட்சிமை நிறைந்தவரே

    மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
    மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

    உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
    இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

    1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
      மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை
    2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
      மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

    Maatchimai Nirainthavarae Lyrics in English

    maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae
    maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae

    ummai aaraathikkintom ummai aaraathikkintom
    iratchakaa thaevaa ummai aaraathikkintom

    1. ooliya paathaiyilae enakkuthavina maathayavae
      maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai
    2. en pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae
      maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai
  • Maasillaa Maasillaa மாசில்லா மாசில்லா

    மாசில்லா மாசில்லா
    மனம் வேண்டும் இயேசையா
    ஆசைமேல் ஆசையாய்
    வாஞ்சிக்கிறேன் தாருமையா!

    மாசில்லா மாசில்லா
    மனம் வேண்டும் இயேசையா
    வாஞ்சையோடு கெஞ்சுகிறேன்
    அடியோடெனை மாற்றுமையா (2)

    1. எண்ணத்தில் உண்மை வேண்டும்
      இதயத்தில் தூய்மை வேண்டும் ( 2)
      அக்கினியின் ஜீவாலை வேண்டும்
      புலன்கள் மேல் வெற்றி வேண்டும்!
      வாழ்வெல்லாம் உம் அழகு
      மங்காமல் விளங்க வேண்டும்
      மனிதரெல்லாம் என்னில் உம்மை
      நாள்தோறும் காண வேண்டும் (2)
    2. விசுவாச தைரியம் வேண்டும்
      ஆசையை அடக்க வேண்டும் (2)
      சிலுவையை சுமக்க வேண்டும்
      தேவபயம் நிரம்ப வேண்டும்!
      நித்தம் உம் சத்தத்தை வாஞ்சிக்கும்
      செவிகள் வேண்டும்
      தேவசித்தம் செய்திடவே
      ஆவல் நிரம்ப வேண்டும் (2)
    3. நன்னடத்தை உறவில் வேண்டும்
      நாணயம் என் செயலில்
      வேண்டும் (2)
      நல்லொழுக்கம் பண்பில் வேண்டும்
      நாவடக்கம் பேச்சில் வேண்டும்!
      நாளெல்லாம் முதிர்ச்சி
      பெற்றே மகிழ்ச்சியாய்
      வாழ வேண்டும்
      நண்பர்களைத் திரளாக
      உம்மண்டை சேர்க்க வேண்டும் (2)

    Maasillaa Maasillaa Lyrics in English

    maasillaa maasillaa
    manam vaenndum iyaesaiyaa
    aasaimael aasaiyaay
    vaanjikkiraen thaarumaiyaa!

    maasillaa maasillaa
    manam vaenndum iyaesaiyaa
    vaanjaiyodu kenjukiraen
    atiyodenai maattumaiyaa (2)

    1. ennnaththil unnmai vaenndum
      ithayaththil thooymai vaenndum ( 2)
      akkiniyin jeevaalai vaenndum
      pulankal mael vetti vaenndum!
      vaalvellaam um alaku
      mangaamal vilanga vaenndum
      manitharellaam ennil ummai
      naalthorum kaana vaenndum (2)
    2. visuvaasa thairiyam vaenndum
      aasaiyai adakka vaenndum (2)
      siluvaiyai sumakka vaenndum
      thaevapayam nirampa vaenndum!
      niththam um saththaththai vaanjikkum
      sevikal vaenndum
      thaevasiththam seythidavae
      aaval nirampa vaenndum (2)
    3. nannadaththai uravil vaenndum
      naanayam en seyalil
      vaenndum (2)
      nallolukkam pannpil vaenndum
      naavadakkam paechchil vaenndum!
      naalellaam muthirchchi
      pette makilchchiyaay
      vaala vaenndum
      nannparkalaith thiralaaka
      ummanntai serkka vaenndum (2)
  • Maasila Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
    ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

    1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
      ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
    2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
      வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
    3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
      தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

    Maasila Deva Puthiran Lyrics in English

    maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya! (2)
    jeya maasillaath thaeva puththiran maanidanaanaarae jeya! jeya!
    maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya!

    1. aaseervaathamae! kana thaesaar neethamae (2)
      olir kaasini meethathi naesappirakaasa vinn vaasa kirupaasana
    2. saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)
      valar pethlakaem oorthanilae karisiththuk kanniyaasthiri viththinil
    3. antharam poomiyum athi sunthara naemiyum (2)
      thinam ainthoru naalinilae thiru munthina moontilontakiya
  • Maasarra Thuuyanal Anpae மாசற்ற தூயநல் அன்பே

    இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்

    மாசற்ற தூயநல் அன்பே அன்பே
    மாறிடா மங்கிடா அன்பே அன்பே
    காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
    உள்ளம் உடைக்கும் அன்பே!

    1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
      கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
      என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
      ஓ நல்ல தேவ அன்பே!
    2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
      என் உள்ளக் கறையை கழுவவோ!
      ஏனையா இத்தனை என் மீது அக்கறை
      ஓ நல்ல தேவ அன்பே!
    3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
      அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
      என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே
      உள்ளம் மகிழ்கின்றேனே.

    Maasarra Thuuyanal Anpae Lyrics in English

    ivvalavaay anpu koornthaar

    maasatta thooyanal anpae anpae
    maaridaa mangidaa anpae anpae
    kaalaththil adangaa njaalaththil sirantha
    ullam utaikkum anpae!

    1. erusalaem therukkalil olam aen?
      kolkathaa malaiyil koottam aen?
      ennaith thiruththida en anpu saakuthae
      o nalla thaeva anpae!
    2. siluvaiyin atiyil iraththak karai
      en ullak karaiyai kaluvavo!
      aenaiyaa iththanai en meethu akkarai
      o nalla thaeva anpae!
    3. naesaththirkethiraay ontum seyyaen
      anpirku atimai aakukinten
      enyaavum anpirkae! en ellaam anpirkae
      ullam makilkintenae.
  • Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்
    என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

    1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
      ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
      கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே
    2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
      அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
      பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே
    3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
      மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
      அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே
    4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
      மாறுதே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே
      என் இயேசுவாலே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே

    மாறிற்றே எல்லாம் மாறிற்றே
    என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே


    Maaridum Ellaam Maaridum Lyrics in English

    maaridum ellaam maaridum
    en Yesuvaalae ellaam maaridum (2)

    1. avar aataiyai thotta maaththiraththil perum paadu maaritte
      aathiyum anthamamumaanavaraalae anthakaaram neengitte
      kattukal utainthathae kavalaikal neengitte
    2. iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte
      amaithalaay iru entarae alaikalum oynthathae
      payangal paranthathae nampikkai piranthathae
    3. laasaruvae nee elunthu vaa entu sonnaarae
      mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae
      alukural nintathae aanantham vanthathae
    4. maaruthae ellaam maaruthae en Yesuvaal ellaam maaruthae
      maaruthae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae
      en Yesuvaalae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae

    maaritte ellaam maaritte
    en Yesuvaalae ellaam maaritte

  • Maaridathore nesa meetpar மாறிடாதோர் நேச மீட்பர்

    மாறிடாதோர் நேச மீட்பர்
    மாற்றுவார் உன் வேதனை
    பாவத்தாலும் நோயினாலும்
    வருந்துவானேன் நம்பிவா

    நம்பி வா நீ நம்பி வா
    இயேசு உன்னை அழைக்கிறார்

    லோக மாந்தர் கைவிடுவார்
    துரோகம் கூறி தூற்றுவார்
    தூய இயேசு மெய் நேசமாய்
    துன்பம் தீர்ப்பார் நம்பி வா

    வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
    வற்றிப் போகச் செய்குவார்
    வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
    என்றும் ஊறும் நம்பி வா


    Maaridathore nesa meetpar Lyrics in English

    maaridaathor naesa meetpar
    maattuvaar un vaethanai
    paavaththaalum Nnoyinaalum
    varunthuvaanaen nampivaa

    nampi vaa nee nampi vaa
    Yesu unnai alaikkiraar

    loka maanthar kaividuvaar
    thurokam koori thoottuvaar
    thooya Yesu mey naesamaay
    thunpam theerppaar nampi vaa

    valla meetpar kannnneer yaavum
    vattip pokach seykuvaar
    vattaா jeeva oottaாy unmael
    entum oorum nampi vaa

  • Maarida Em Maa Nesare மாறிடா எம் மா நேசரே

    1. மாறிடா எம் மா நேசரே – ஆ
      மாறாதவர் அன்பெந்நாளுமே
      கல்வாரி சிலுவை மீதிலே
      காணுதே இம்மா அன்பிதே – ஆ

    ஆ! இயேசுவின் மகா அன்பிதே
    அதன் ஆழம் அறியலாகுமோ
    இதற்கிணையேதும் வேறில்லையே
    இணை ஏதும் வேறில்லையே

    1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
      பாரில் உன்னைத் தேடி வந்தாரே
      நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
      நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு
    2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
      உள்ளம் போல் நேசித்ததினால்
      அல்லல் யாவும் அகற்றிடவே
      ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு
    3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
      தேவனின் விண் சாயல் அணிய
      ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
      ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு
    4. நியாய விதி தினமதிலே – நீயும்
      நிலையாகும் தைரியம் பெறவே
      பூரணமாய் அன்பு பெருக
      புண்ணியரின் அன்பு வல்லதே — ஆ! இயேசு
    5. பயமதை நீக்கிடுமே – யாவும்
      பாரினிலே சகித்திடுமே
      அது விசுவாசம் நாடிடுமே
      அன்பு ஒருக்காலும் ஒழியாதே — ஆ! இயேசு

    maaridaar em maa naesarae
    aa maaraathavar anpennaalumae
    kalvaari siluvai meethilae
    kaanuthae im maa anpithae

    aa Yesuvin makaa anpithae
    athin aalam ariyalaakumae
    itharkinnaiyaethum vaerillaiyae

    paaviyaaka irukkaiyilae anpaay
    paaril unnaiththaeti vanthaarae
    neesan entunnaith thallaamalae
    naesanaaka maattidavae

    ullaththaal avarai thallinum
    tham ullam pol naesiththathinaal
    allal yaavum akattidavae
    aathi thaevan paliyaanaarae

    aaviyaal anpai pakarnthida
    thooya thaevanin vinn saayal anniya
    aaviyaalae anpaich sorinthaar
    aavalaay avaraich santhikka

    niyaayavithi thinamathilae
    neeyum nilaiyaakum thairiyam peravae
    pooranamaay anpu peruka
    punnnniyarin anpu vallathae

    payamathai neekkidumae
    yaavum paarinil sakiththidumae
    athu viduvaasam naadidumae
    anpu orukkaalum oliyaathae