Category: Song Lyrics

  • இயேசுவே என் இதயத்தின் Iyesuve en ithayaththin

    இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
    வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா

    அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
    நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
    ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
    வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு

    காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
    காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை
    நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
    நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை


    iyesuve en ithayaththin raja en
    vazhkkaiyin saronin inpa roja

    alai mothitum patakam nam vazhvil
    nam ariyamal iruppavar than iyesu
    aazhkatal thanil uruvakum puyal pol
    vazhvil varukinra thuyar thirppar iyesu

    karirul suzhnthu puyal visum velai
    kakkum karam kontu thukkitum kalai
    nan than anysathe enrar avvelai
    nathanin anpal untakum pamalai


  • நல்லவரே நம் கர்த்தரே முன் Nallavare nam karththare mun

    நல்லவரே நம் கர்த்தரே முன்
    செல்லும் கர்த்தாதி கர்த்தரே
    வல்லவரின் எல்லை இல்லா கிருபை
    தொடர்ந்து வரும் நித்தமே

    உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்
    எங்கள் ஆண்டவரே கர்த்தரே
    எதிர் வரும் பகை அதிர்ந்தோடும் பெரும்
    இரட்சிப்பை நாம் காண்போம்
    கர்த்தரை தேசம் பற்றிக் கொள்ள
    சத்துருக்கள் வரும் அந்நேரமே
    பக்தியாய் பணிந்து நாம் தொழுவோம்
    தேவன் நல்லவர் வல்லவரே

    கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக
    நித்தம் நம் மேன்நிலை பெறுவோம்
    தீர்க்க தீர்க்க தரிசனங்கள் நம்பி
    சித்தி பெற்றே வளம் பெறுவோம்
    கர்த்தரின் மகத்துவத்தை பாடி
    துதி பேறு உயர்த்திப் கூறவே
    பக்தர் நல் சேனை முன் சென்று
    வெற்றியின் தொனியை நாம் எழுப்புவோம்

    இந்த யுத்தம் உங்கள் யுத்தம் அல்ல என்று
    பரிசுத்த தேவன் வாக்கு கேட்டு நாம்
    கர்த்தரின் நல் மீட்பினை காண்போம்
    திடம் கொள்வோம் ஜெயம் பெறுவோம்
    பகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல்
    பரிசுத்தரை பணிந்து தொழுவோம்
    பெரு முழுக்கத்தோடு நாம் முன்னேறி
    பரம தேவனை துதித்து பாடுவோம்


    Nallavare nam karththare mun
    sellum karththathi karththare
    vallavarin ellai illa kirupai
    thotarnthu varum niththame

    unthan thanysam venti onru kuti ninrom
    engkal aantavare karththare
    ethir varum pakai athirnthotum perum
    iratsippai nam kanpom
    karththarai thesam parrik kolla
    saththurukkal varum annerame
    pakthiyay paninthu nam thozhuvom
    thevan nallavar vallavare

    karththar thantha varththai perra makkalaka
    niththam nam mennilai peruvom
    thirkka thirkka tharisanangkal nampi
    siththi perre valam peruvom
    karththarin makaththuvaththai pati
    thuthi peru uyarththip kurave
    pakthar nal senai mun senru
    verriyin thoniyai nam ezhuppuvom

    intha yuththam ungkal yuththam alla enru
    parisuththa thevan vakku kettu nam
    karththarin nal mitpinai kanpom
    thitam kolvom jeyam peruvom
    pakaivar kuttam kantu anysitamal
    parisuththarai paninthu thozhuvom
    peru muzhukkaththotu nam munneri
    parama thevanai thuthiththu patuvom


  • இரட்சண்ய கொம்பு இயேசு Iratsanyak kompu iyesu

    இரட்சண்ய கொம்பு இயேசு
    எந்தன் வாழ்வில் வந்ததால்
    இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது

    இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது
    சமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது

    புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்தது
    வெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது

    இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்தது
    மனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது


    IratsaNyak kompu iyEsu
    enthan vazhvil vanthathal
    iratsaNya patal enthan navil vanthathu

    iratsippu vanthathu perum makizhssiyai thanthathu
    samathanam vanthathu thuthi patalum vanthathu

    puthu jIvan vanthathu puthuvazhvum vanthathu
    veRRiyum vanthathu jeyathoniyum thanthathu

    iruLum akanRathu jIva oLiyum vanthathu
    manathil maRurUpam puthu veLissam vanthathu


  • இதோ சகோதரர் ஒருமித்து Idow sagodharur orumithee

    இதோ சகோதரர் ஒருமித்து
    வாசம் பண்ணுவது – எத்தனை
    நன்மைகள் எத்தனை இன்பமானது – 2

    அது எத்தனை இன்பமானது
    அது எத்தனை சந்தோஷம்
    அது எத்தனை மகிழ்ச்சியானதே

    அது ஆரோனுடைய சிரசின்மேலே
    ஊற்றப்பட்ட நல்ல தைலம்போல
    அபிஷேகம் இறங்கும்

    எர்மோன் சீமோன் மலைமேல்
    இறங்கும் பனிகள் போல்
    அதுபோல கர்த்தர் நம்மை
    என்றும் ஆசீர்வதிப்பாரே

    தேவ ஜனங்கள் கூடும் போது
    தேவன் வந்திடுவார்
    அங்கே என்றும் கிருபை ஜீவன்
    தாங்கி நடத்திடுமே


    Idow sagodharur orumithee
    vasam pannuvadu- yethanai
    nanmaigall yethannai inbamandu-2

    adu yetthanai inbamandu
    adu yetthanai sandoshum
    adu yethanai magilthiyanadeii

    adu aronudaiye sirasinmaile
    utreepatte nalle thailum poll
    abishegum irangum

    yermon simon maalaimell
    irangum panigal poll
    athupoll karthar nammai
    yendrum assirwadiparee

    deve janagal kudum bodhe
    devan wandhiduwar
    ange endrum kirubai jivan
    thangi nadathidumai


  • இத்தனை பெரிய உலகம் Ithanai periye ulagum

    இத்தனை பெரிய உலகம்
    இதனை படைத்திட்டது யார்
    இயற்கையாக முடியுமா (3) இந்த படைப்பு
    சூரியன்… சந்திரன்… நட்சத்திரம்… (2)
    எத்தனை ஆச்சரியம் (2)

    இயற்கை என்று சொல்லும் மாந்தரே
    சிந்திப்பீர் சில நிமிடமே (2) சூரியனை
    வானிலே ஓர் நாள் இரவிலே – உன்னால்
    நிறுத்த முடியுமா முயன்று பாருமே (2)

    நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை
    உன்னால் இன்று கூற முடியுமா (2)
    சின்னஞ்சிறிய நட்சத்திரம் ஒன்று
    கீழே விழுந்தால் – உன் நிலைமை
    என்னவாகும் சிந்தித்து பாரும் (2)

    காற்று கடலின் சீற்றம் காண்கிறாய்
    அவற்றை உன்னால் அடக்க முடியுமா (2)
    அருமை நாதர் இயேசுவோ
    அவற்றை அன்று அடக்கினார் – உன்னால்
    இன்று முடியுமா சிந்தித்து பாரும்


    Ithanai periye ulagum
    ithanani padaithitadu yar
    iyarkayage mudiyuma (3) indhe padapu
    suriyan chandirun nathathirungal (2)
    yethanai athiriyum(2)

    Iyarkai yendru sollum manthare
    sindipeer sill nimidumai(2)suriyanai
    vanilai orr naal iravillai- unnal
    niruthhe mudiyuma muyandru parum(2)

    nathathirathin eniikaiyinai
    unnal indru kuree mudiyuma(2)
    chinchiriye nathathirum ondru
    kilai vilindhalum – unn nilaimai
    yennewagum sindithe parum(2)

    katru kadalin sitrum kangirae
    awatrai unnal adaikk mudiyum (2)
    arumai nadhar yesuwoo
    awatrai andru adaikinar-unnal
    indru mudiyuma sindithu parum


  • இஸ்ரவேலின் துதிக்குள் isravaelin thuthikkul

    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
    இறங்கி வந்திடுமே

    உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்

    இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
    எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே

    எதைக் குறித்தும் கவலைப்படாமல்
    எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்
    ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
    இப்போ எல்லா புத்திக்கும் மேலான
    உம் சமாதானம் ஈந்திடுமே

    ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
    ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
    ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
    ஆலயமாய் எம்மை பூவில் காண
    உம் மகிமையால் நிரப்பிடுமே

    உம் கிருபையின் மகிமைக்குமே
    எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
    எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
    எம்மை மீட்கவே முத்தரித்தீரே
    எம் ஆவியானவரால்


    isravaelin thuthikkul vaasam pannnum thaevanae
    innaeram atiyaarin thuthikal maththiyilae
    irangi vanthidumae

    um vaasalkalil thuthiyodum
    um pirakaaraththil pukalchchiyodum
    ummaith thuthiththidavae piravaesiththittaோm
    um naamaththai orumiththumae
    uyarththiyae pottukirom

    isravaelin ekkaalam makaa
    aaravaaraththin mulakkaththin mun
    erikovin alangam veelnthathu pol
    ippo saththuruvin kottaைkalai
    itiththu thakarththidumae

    ethaik kuriththum kavalaippadaamal
    ellaa vinnnappamum aeraெdungal enteer
    sthoththira jepa vaennduthalodu
    ippo ellaa puththikkum maelaana
    um samaathaanam eenthidumae

    aasaariyar laeviyir orumiththummai
    aeka saththamaay thuthiththup paatidavae
    aalayam makimaiyaal nirampinathu pola
    aalayamaay emmai poovil kaana
    um makimaiyaal nirappidumae

    um kirupaiyin makimaikkumae
    emmai pukalchchiyaay mun kuriththeer
    em suthanthiraththin achchaாramaaka
    emmai meetkavae muththariththeerae
    em aaviyaanavaraal


  • இன்னமும் தாமதமேன் Inamum thagaum yen

    இன்னமும் தாமதமேன்
    இன்ப சத்தம் கேளாயோ
    இன்னலின்றி காத்திட
    இன்றுன்னை அழைக்கிறாரே

    ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
    நித்திய ஜீவனுண்டே
    நீங்கிடா அவர் அன்பையே
    நாடி நீ வந்திடாயோ

    கல்வாரி மேட்டினிலே
    கரங்களை விரித்தவராய்
    காத்துன்னை இரட்சித்திட
    கனிவுடன் அழைக்கின்றாரே

    லோகத்தின் இன்பமெல்லாம்
    மாறிடும் க்ஷணப் பொழுதில்
    மாறிடா நேசர் இயேசு
    மாண்புடன் அழைக்கிறாரே

    நாளை உன் நாளாகுமோ
    நாடாயோ நாதனை நீ
    நாசலோகை விட்டிட
    நாதன் அழைக்கிறாரே


    Inamum thagaum yen
    inbe satham kelayo
    innilirundhe kelayo
    indru unnai allaikirare

    jivanin adhibadi yesuvudandai
    nitthiye jivan undee
    nigidum avar anbaye
    nadi ni vandhidayo

    kallarai mitinile
    karangalai virithawarai
    kathhe unnai rathithide
    kanivudun allaikirare

    ligathin inbumyellam
    maridum usanamp poludhil
    marida nesar yesu
    manbulan allaikiraree

    nalai unn nalagumo
    nadayo nathnai ni
    naselogai vitide
    nadhun allaikirarai


  • இந்தியாவில் இயேசு நாமம் Indhiyavil yesu namam

    இந்தியாவில் இயேசு நாமம்
    முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2

    இந்தியா (3) இயேசுவுக்கே

    சாத்தானின் கோட்டைகளை
    உடைத்திடுமே இயேசு நாமம்

    மேய்ப்பரெல்லாம் ஒன்றாக
    சேரட்டுமே சேரட்டுமே

    சபைகளெல்லாம் ஒன்றாக
    வளரட்டுமே வளரட்டுமே

    எழுப்புதல் தீ இந்தியாவில்
    எரியட்டுமே எரியட்டுமே


    Indhiyavil yesu namam
    mulangatumai mulangatumai -2

    indhiya(3)yesuvukai

    sathanin kottaigalai
    odithidum yesuvin namum

    maipargalellam ondrage
    seratumai seratumai

    sabaigalelam ondrage
    valaratumai valaratumai

    Yelupudhal yhi indhiyawil
    yeryatumai yeriyatumai


  • இயேசுவிடம் திரும்பு Indhiyave thirumbu

    இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு
    ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு – 2

    கோடி கோடி ஜனக்கூட்டம்
    தேவன் எங்கே எங்கே இங்கு
    தேடி தேடி எங்கும் பார்த்தும்
    தெய்வம் ஒன்றும் காணவில்லை
    நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்
    தேடி வந்து உன்னை
    இன்றே அழைக்கின்றார் – வா – 2

    ஜாதி வேத மத வேர்கள்
    சாவின் பாதை கொண்டு செல்லும்
    நீ தேவன்புக்குள் வந்தால்
    மனித நேயம் என்றும் ஒங்கும்
    சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்
    சிலுவையில் தொங்கி ஜீவன் தந்த தெய்வம்
    அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட
    இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா (4)


    Indhiyave thirumbu yesuvidum thirumbu
    jivanulle devanidum thirumbu -2

    kodi kodi janakuttam
    devan enge enge ingu
    thedi thedi yengum parthum
    theivam ondrum kanai villaai
    nadi wandhe deiwam yengal yesu rajan
    thedi wandhe unnai
    indree allaikindrar -wa- 2

    jadhi vedhe madhe veirgal
    savin padhaio konde sellum
    nii thevanbukul wandhal
    manidhe neyam endrum ongum
    samadanam devan nammai allum rajan
    siluvaiyil thongii jivan thadhe deiwam
    avar anbu nesam yavum unnil perugide
    indhiya indhiya manam thirumbu indiya – 4


  • இந்தியாவின் இன்றியமையா Indhiavin indriyamaiya

    இந்தியாவின் இன்றியமையா தேவை
    இயேசுவே – சிலுவையில் சிந்திய
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    விசுவாசம் தரும் தேவனின் ஜீவ
    வார்த்தையை – இரட்சிப்பு உண்டாக
    விசுவாசிக்கும் உள்ளமே

    துதிப்போம் ஜெபிப்போம்
    சுதந்தரிப்போம் சொந்தமாக்குவோம்
    விதைப்போம் அறுப்போம்
    களஞ்சியத்தில் சேர்த்திடுவோம் – 2

    தமிழகம் கேரளம் கர்நாடகத்தில்
    கர்த்தர் நாமம் உயரட்டுமே
    ஆந்திரம் ஒரிசா பீகாரிலே
    சமாதானம் உண்டாகட்டும்
    ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில்
    தேவசித்தம் நிறைவேறட்டும்
    மணிப்பூர் நாகலாந்து திரிபுராவில்
    மணமாற்றம் உண்டாகட்டும்

    குஜராத் பஞ்சாப் மேற்குவங்கத்தில்
    தேசசெய்தி எழும்பட்டுமே
    ஹரியானா மகாராஷ்டிரா உத்திராஞ்சலில்
    விடுதலை உண்டாகட்டும்
    அருணாச்சல பிரதேசம் சிக்கிமிலே
    நற்செய்தி பரவட்டுமே
    மணிப்பூர் நாகலாந்து திரிபுராவில்
    மனமாற்றம் உண்டாகட்டும்

    ஜம்முகாஷ்மீர் இமாச்சல பிரதேசத்தில்
    வன்முறைகள் ஒழியட்டுமே
    ஜார்கண்ட் சட்டீஸ்கர் டாமன் டையுவில்
    சுவிசேஷத் தடை நீங்கட்டும்
    மாலத்தீவு லட்சுத்தீவு பாண்டிசேரியில்
    அற்புதங்கள் நிகழட்டுமே
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில்
    தேவ மகிமை காணட்டுமே


    Indhiavin indriyamaiya devan
    yesuve -siluvaiyil sindiye
    yesu kristhuvin rathamei
    visuwasam tharum devanin jive
    warthayai-rathipe undage
    visuwasikum ullamm

    thudipoom jebippom
    sudhandiripoom sondhamakuwom
    vidhaipom aruppom
    kalanjiyathil serithdeuwom -2

    thamilagam keralam karanatakathil
    karthar namam uyarthiduwomai
    andirum oddisa biharile
    samadhanmam undagtum
    rajasthan madhya pradeshthil
    devee sitham niraiverattum
    Manipur Nagaland Tripuravil
    manematrum undagatuum

    gujrath Punjab merkuwangalaum
    deseseidhe yelumbatumai
    haryana maharastra uthiranchil
    viduthalai undagatum
    arunachal pradeshum sikkimil
    narchaidhe paravatum
    Manipur Nagaland Tripuravil
    manematrum undagatuum

    jammu kashmir himachal pradhehathil
    wanmuraigal olliyattum
    jharkhand chattisgarh damn diyuwil
    suvishesham thadai nigatum
    mallaithivu ladththevu pondicherryilum
    arpudhangal nigalatumai
    andaman nicobar thivugalil
    theve magimai kannatumai