Category: Song Lyrics

  • Ennoda Yesuvae Konja Neram என்னோட இயேசுவே கொஞ்ச நேரம்

    என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

    ஆசையாய் இருக்குதய்யா – 2

    உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2

    எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2

    நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2

    திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2

    உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2

    கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் – 2


    Ennoda Yesuvae Konja Neram Lyrics in English

    ennoda Yesuvae konja naeram paesumae

    aasaiyaay irukkuthayyaa – 2

    un arukil naan amarnthu en kathaiya solla vaenum – 2

    eppothum naan irukkaen entu solla nee vaenum – 2

    naan thirumpura thisaiyellaam un uruvam theriya vaenum – 2

    thirumpaatha sonthamaaka nee mattum enakku vaenum – 2

    un kaiyap putichchu naanum kaalaara nadakka vaenum – 2

    kalangura en kannna un karamae thotaikka vaenum – 2

  • Ennnni Ennnni Thuthiseyvaay எண்ணி எண்ணி துதிசெய்வாய்

    எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    எண்ணடங்காத கிருபைகளுக்காய்
    இன்றும் தாங்கும் உம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1. உன்னை நோக்கும் எதிரியின்
      கண்ணின் முன்பில் பதறாதே ,
      கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
      உன்னை மூடி மறைப்பாரே
    2. யோர்தான் புரண்டு வரும்போல்
      எண்ணற்ற பாரங்களோ
      எலியாவின் தேவன் எங்கே
      உந்தன் விஸ்வாச சோதனையில்
    3. உனக் கெதிராகவே
      ஆயுதம் வாய்க்காதே
      உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
      அவர் தாசர்க்கு நீதியவர்
    4. திறந்த வாசல் முன்னே
      தீவிரமாய் பிரவேசிப்போம்
      ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
      உன் கர்த்தர் முன் செல்வார்

    Ennnni Ennnni Thuthiseyvaay Lyrics in English

    ennnni ennnni thuthiseyvaay
    ennnadangaatha kirupaikalukkaay
    intum thaangum um puyamae
    inpa Yesuvin naamamae

    1. unnai Nnokkum ethiriyin
      kannnnin munpil patharaathae ,
      kannmannippol kaakkum karangalil
      unnai mooti maraippaarae
    2. yorthaan puranndu varumpol
      ennnatta paarangalo
      eliyaavin thaevan engae
      unthan visvaasa sothanaiyil
    3. unak kethiraakavae
      aayutham vaaykkaathae
      unnai alaiththavar unnmai thaevan
      avar thaasarkku neethiyavar
    4. thirantha vaasal munnae
      theeviramaay piravaesippom
      oru manithanum pootta maattan
      un karththar mun selvaar
  • Enniladangal Sthoethiram எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

    எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே

    1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
      வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
    2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
      ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
    3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
      நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே!
    4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
      சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!

    Enniladangal Sthoethiram Lyrics in English

    ennnnil adangaa sthoththiram – thaevaa
    ententum naan paaduvaen
    innaal varai en vaalvilae
    neer seytha nanmaikkae

    1. poomiyil vaalkinta yaavum athin mael ulla aakaayamum
      vaan thoothar senaikal yaavum thaevaa ummaip pottuthae!
    2. sooriya santhirarotae sakala natchaththirak koottamum,
      aakaaya paravaikal yaavum thaevaa ummaip pottuthae!
    3. kaattinil vaalkinta yaavum kadum kaattum panith thooralum
      naattinil vaalkinta yaavum naathaa ummaip pottuthae!
    4. paava manukkulam yaavum thaevaa um anpinai unarnthae
      siluvaiyin thiyaakaththaik kanndu oyaa thuthi paaduthae!
  • Ennil enna kandeer என்னில் என்ன கண்டீர்

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப்பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி
    இவ்வேழைக்கு தகுதி இல்லையே

    என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

    உம்மை விட்டு விலகும்
    செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயப்படுத்தும்
    வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

    பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
    உந்தன் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீரே
    உம் நேசம் போல்
    ஒன்றும் இங்கு இல்லையே


    Ennil enna kandeer Lyrics in English

    ennil enna kannteer ennai naesikka
    ippaavikku thakuthi illaiyae
    ennil enna kannteer ennai Nnokki
    ivvaelaikku thakuthi illaiyae

    en pelaveenam arinthum neer naesiththeer
    en kuraikal therinthum neer naesiththeer

    ummai vittu vilakum
    seyal seytha naal unndu
    ummai kaayappaduththum
    vaarththai sonna naal unndu
    paavam seyya kaalam kaetta thuroki naan

    paava settil kidantha or paavi naanaiyaa
    unthan anpin kayittaாl
    ennai iluththeerae
    um naesam pol
    ontum ingu illaiyae

  • Ennil Anbu Koornthirae என்னிலே அன்பு கூர்ந்தீரே

    என்னிலே அன்பு கூர்ந்தீரே
    என்னை மாற்ற என் இயேசு ராஜனே
    எந்தன் ஜீவியத்தில் நீர் செயத
    நன்மைகள் நினைக்கையில்
    வர்ணிக்க வார்த்தை இல்லையே

    காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்
    நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்
    தாழ்விலே தாங்கினீர்… தேவனே இயேசுவே

    நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்
    பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட
    கல்வாரி அன்பினால்…. காத்தீரே நேசரே


    Ennil Anbu Koornthirae Lyrics in English

    ennilae anpu koorntheerae
    ennai maatta en Yesu raajanae
    enthan jeeviyaththil neer seyatha
    nanmaikal ninaikkaiyil
    varnnikka vaarththai illaiyae

    kaarirul yaathraiyil nalvali kaattuveer
    naeritta thunpangal sothanai vaelaiyil
    thaalvilae thaangineer… thaevanae Yesuvae

    nashdangal eththanai kashdangal kannnneeril
    panthukkal kaivida sinaekithar maarida
    kalvaari anpinaal…. kaaththeerae naesarae

  • Ennil adanga sthothiram எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

    எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே

    வானாதி வானங்கள் யாவும்
    அதின் கீழுள்ள ஆகாயமும்
    பூமியில் காண்கின்ற யாவும்
    கர்த்தா உம்மைப் போற்றுமே

    காட்டினில் வாழ்கின்ற யாவும்
    கடும் காற்றும் பனி தூறலும்
    நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    நாதா உம்மை போற்றுமே

    நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
    நிலத்தின் ஜீவ ராசியும்
    பாரினில் பறக்கின்ற யாவும்
    பரனே உம்மைப் போற்றுமே

    வால வயதுள்ளானோரும் – மிகும்
    வயதால் முதிர்ந்தோர்களும்
    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே


    Ennil adanga sthothiram Lyrics in English

    ennnnidalangaa sthoththiram -thaevaa
    ententum naan paaduvaen
    innaal varai en vaalvilae
    neer seytha nanmaikkae

    vaanaathi vaanangal yaavum
    athin geelulla aakaayamum
    poomiyil kaannkinta yaavum
    karththaa ummaip pottumae

    kaattinil vaalkinta yaavum
    kadum kaattum pani thooralum
    naattinil vaalkinta yaavum
    naathaa ummai pottumae

    neerinil vaalkinta yaavum -in
    nilaththin jeeva raasiyum
    paarinil parakkinta yaavum
    paranae ummaip pottumae

    vaala vayathullaanorum – mikum
    vayathaal muthirnthorkalum
    paalakar tham vaayinaalum
    paati ummaip pottuvaarae

  • Ennidam Ezhuntha Yesuvae Umakku என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

    என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

    அன்பு ஆராதனை நன்றியுமென்றும் – 2

    பரலோக வாசிகள் அருமையாய் உம்மை

    புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த – 2

    நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

    நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

    மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

    நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென – 2

    ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

    பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

    சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்

    சீரிய திருவுள்ளம் பிறழாது வளர – 2

    இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க

    நேசமாய் அருள வேண்டுகின்றோமே


    Ennidam Ezhuntha Yesuvae Umakku Lyrics in English

    ennidam eluntha Yesuvae umakku

    anpu aaraathanai nantiyumentum – 2

    paraloka vaasikal arumaiyaay ummai

    pukalnthu konndaatida puviyilae intha – 2

    neesanaam ennidam elunthathum aeno

    naesamun athisaya irakkamumallo

    maasillaa appak kunangalil marainthu

    naesamaay ennul elunthu vantheerena – 2

    aasaiyaay Yesuvae visuvasiththumakku

    poosithamaay nanti seluththukintenae

    sinthanai sollilum seyalilum unthan

    seeriya thiruvullam piralaathu valara – 2

    Yesuvae unthan arasengum vilanga

    naesamaay arula vaenndukintomae

  • Enni Enni Thuthi Seivaai எண்ணி எண்ணி துதி செய்வாய்

    எண்ணி எண்ணி துதி செய்வாய்
    எண்ணிலடங்காத கிருபைகட்காய்
    என்றும் தங்கும் தம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1.உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்னே பதறாதே
    கண்மணிபோல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைப்பாரே!

    2.யோர்தான் புரண்டு வரும்போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விசுவாச சோதனையில்!

    3.உனக்கெதிராகவே
    ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசருக்கு நீதியவர்!

    4.திறந்தவாசல் முன்னே
    விரம் பிரவேசிப்போம்
    ஒரு மனிதனும் பூட்டமாட்டான்
    உன் கர்த்தர் முன் செல்வார்!

    5.மனிதரை ஜனங்களை
    மன்னவர் தருவாரே
    நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

    ஜீவன் தந்தவர் கேட்கிறாரே!


    Enni Enni Thuthi Seivaai Lyrics in English

    ennnni ennnni thuthi seyvaay
    ennnniladangaatha kirupaikatkaay
    entum thangum tham puyamae
    inpa Yesuvin naamamae

    1.unnai Nnokkum ethiriyin
    kannnnin munnae patharaathae
    kannmannipol kaakkum karangalil
    unnai mooti maraippaarae!

    2.yorthaan puranndu varumpol
    ennnatta paarangalo
    eliyaavin thaevan engae
    unthan visuvaasa sothanaiyil!

    3.unakkethiraakavae
    aayutham vaaykkaathae
    unnai alaiththavar unnmai thaevan
    avar thaasarukku neethiyavar!

    4.thiranthavaasal munnae
    viram piravaesippom
    oru manithanum poottamaattan
    un karththar mun selvaar!

    5.manitharai janangalai
    mannavar tharuvaarae
    nam jeevanai eedaay koduppom

    jeevan thanthavar kaetkiraarae!

  • Enni Enni Paar எண்ணி எண்ணிப் பார்

    எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
    எபிநேசர் செய்த நன்மைகளை – 2

    நன்றி நன்றி நன்றி
    கோடி கோடி நன்றி
    பலிகள் செலுத்திடுவோம் – 2

    தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
    நீதிமான் ஆக்கினாரே – 2
    நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
    நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

    காயப்பட்டார் நாம் சுகமாக
    நோய்கள் நீங்கியதே – 2
    சுமந்து கொண்டார் நம் பாடுகள்
    சுகமானோம் தழும்புகளால் – 2

    சாபமானார் நம் சாபம் நீங்க
    மீட்டாரே சாபத்தினின்று
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
    பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

    ஏழ்மையானார் சிலுவையிலே
    செல்வந்தனாய் நாம் வாழ
    சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
    முடிவில்லா வாழ்வு தந்தார் – 2


    Enni Enni Paar Lyrics in English

    ennnni ennnnip paar ennnni paar
    epinaesar seytha nanmaikalai – 2

    nanti nanti nanti
    koti koti nanti
    palikal seluththiduvom – 2

    thanntikkappattar naam mannippataiya
    neethimaan aakkinaarae – 2
    norukkappattar naam meetpataiya
    niththiya jeevan thanthaar – 2 -nanti

    kaayappattar naam sukamaaka
    Nnoykal neengiyathae – 2
    sumanthu konndaar nam paadukal
    sukamaanom thalumpukalaal – 2

    saapamaanaar nam saapam neenga
    meettarae saapaththinintu
    aapirakaamin aaseervaathangal
    pettuk konntoom siluvaiyinaal – 2

    aelmaiyaanaar siluvaiyilae
    selvanthanaay naam vaala
    saavai aettaாr naam jeevan pera
    mutivillaa vaalvu thanthaar – 2

  • Ennavale Jeevan Viduththiro Swamy என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ

    என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
    இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

    பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
    பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
    பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
    மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

    கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
    காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
    வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
    விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
    எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
    எனால் உமக்கென்ன லாபம் யேசு
    மனா பரப்ரம திருவுளமோ இது

    சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
    திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
    வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
    வரவழைக்கிறீர் தயை பாராட்டி
    விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
    மீண்டவாறிது மிக்க விசாலமே
    ஆண்டவா அது பக்கிஷ நேசமே


    Ennavale Jeevan Viduththiro Swamy Lyrics in English

    ennaalae jeevan viduththeero svaamee
    iththanai paattukkingae aduththeero

    ponnaattathipathi paraman aattukkuttiyae
    porumaik kalavilaatha kirupaith thirukkumaaraa
    poonndu por kurusinil araiyunndenai
    meenndanukrakamida neri konndatho

    kallanaippol kattunnda parithaapam meyppoong
    kaavil aaththumaththutta manasthaapam vaerththu
    vellamaay raththam purannda sopam yaaraal
    vipariththu mutiyum un pirasthaapam
    ellaththanai anpilaa ullath thuroki naanae
    enaal umakkenna laapam yaesu
    manaa paraprama thiruvulamo ithu

    siluvai maraththil kaikaal neetti thaevareer
    thiruvilaavaith thulaikka eetti kaayam
    valiya anpin kataikkann kaatti innam
    varavalaikkireer thayai paaraatti
    vilaikoduththenaik kootti mikka salaakyam sootti
    meenndavaarithu mikka visaalamae
    aanndavaa athu pakkisha naesamae