Category: Tamil Worship Songs Lyrics

  • Thiraatchai Chediye Yesu Raajaa திராட்சை செடியே இயேசு ராஜா

    திராட்சை செடியே இயேசு ராஜா
    உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
    உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
    திராட்சை செடியே இயேசு ராஜா

    1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
      பரிசுத்தமானவரே – ஐயா
      உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
      கள்ளம் நீங்குதையா – எனக்கு
    2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
      ஏந்தி வனைந்திடுமே ஐயா
      சித்தம் போல் உருவாக்கும்
      சுத்தமாய் உருமாற்றம்
      நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
    3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
      கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
      வேதத்தை ஏந்துகிறோம்
      வாசித்து மகிழுகின்றோம்
      தியானம் செய்கின்றோம் – நாங்கள்

    Trachai Chadiya
    thiraatchai setiyae Yesu raajaa
    ummodu innainthirukkum kilai naangal
    umakkaay padarukinta koti naangal
    thiraatchaை setiyae Yesu raajaa

    1. pasumpul maeychchalilae nadaththich selpavarae
      parisuththamaanavarae – aiyaa
      ullamae makiluthaiyaa ummodu iruppathanaal
      kallam neenguthaiyaa – enakku
    2. kuyavan kaiyil ulla kalimannnaangal
      aenthi vanainthidumae aiyaa
      siththam pol uruvaakkum
      suththamaay urumaattam
      niththam um karaththil – naangal
    3. vaarththaiyil nilaiththirunthu thinamum
      kani kodukkum seedarkal naangal
      vaethaththai aenthukirom
      vaasiththu makilukintom
      thiyaanam seykintom – naangal
  • Thiraanikku Mel திராணிக்கு மேல்

    திராணிக்கு மேல் சோதித்திட இயேசு
    ஒரு நாளும் விடமாட்டார்
    பெலவீனத்தில் பூரண பெலனை தந்து
    என்றும் வழுவாமல் காத்திடுவார்

    நம்பிடு இயேசுவை
    நல்லவர் உனக்கு

    கடும் புயலினிலே திசை மாறிடாதே
    தாங்கும் புயங்களினால் உன்னை தாங்கிடுவார்
    குழப்பங்களால் வாழ்வை மாய்த்திடாதே
    யேஹோவா ஷாலோம் உண்டு சமாதானம் தருவார்

    காரிருளில் தடுமாறிடாதே
    நித்திய சூரியனாய் உன் முன்னே செல்வார்
    தோல்விகளால் மனம் தளர்ந்திடாதே
    யேஹோவா நிசி உண்டு வெற்றி கொடி ஏற்றுவார்

    சோதனையில் சோர்ந்திடாதே
    உன்னை அழைத்தவரோ என்றும் நடத்திடுவார்
    தேவைகளால் தேவனை மறந்திடாதே
    யேஹோவா யீரே உண்டு எல்லாம் பார்த்துக் கொள்வார்


    Thiraanikku Mel Lyrics in English
    thiraannikku mael sothiththida Yesu
    oru naalum vidamaattar
    pelaveenaththil poorana pelanai thanthu
    entum valuvaamal kaaththiduvaar

    nampidu Yesuvai
    nallavar unakku

    kadum puyalinilae thisai maaridaathae
    thaangum puyangalinaal unnai thaangiduvaar
    kulappangalaal vaalvai maayththidaathae
    yaehovaa shaalom unndu samaathaanam tharuvaar

    kaarirulil thadumaaridaathae
    niththiya sooriyanaay un munnae selvaar
    tholvikalaal manam thalarnthidaathae
    yaehovaa nisi unndu vetti koti aettuvaar

    sothanaiyil sornthidaathae
    unnai alaiththavaro entum nadaththiduvaar
    thaevaikalaal thaevanai maranthidaathae
    yaehovaa yeerae unndu ellaam paarththuk kolvaar

  • Thikkatra Pillaikalukku திக்கற்ற பிள்ளைகளுக்கு

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

    1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
      தூரத்தில் நின்றுவிடுவீரோ
      பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
      இயேசுவே மனமிரங்கும்
      திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
      எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
    2. கர்த்தாவே எழுந்தருளும்
      கைதூக்கி என்னை நிறுத்தும்
      தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
      தூயவரே இரட்சியும்
      திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
      எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
      3.தாயென்னை மறந்தாலும்
      நீர் என்னை மறப்பதில்லை
      ஏழையின் ஜெபம் கேளும் – 2
      இயேசுவே மனமிரங்கும்
      திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
      எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
      தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
      ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
      பக்கப்பலம் நீரே அல்லவோ
      ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

    Thikkatra Pillaikalukku Lyrics in English

    thikkatta pillaikalukku sakaayar neerae allavo
    ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo
    thanimaiyaana enakku sakaayar neerae allavo
    aatharavatta enakku pakkappalam neerae allavo – 2

    1. entaikkum marainthiruppeero
      thooraththil nintuviduveero
      paethaikalai (aelaikalai) marappeero
      Yesuvae manamirangum
      thikkatta pillaikalukku sakaayar neerae allavo
      ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2
    2. karththaavae eluntharulum
      kaithookki ennai niruththum
      theemaikal (theeyavar) ennai soolum naeram
      thooyavarae iratchiyum
      thikkatta pillaikalukku sakaayar neerae allavo
      ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2

    3.thaayennai maranthaalum
    neer ennai marappathillai
    aelaiyin jepam kaelum – 2
    Yesuvae manamirangum
    thikkatta pillaikalukku sakaayar neerae allavo
    ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo
    thanimaiyaana enakku sakaayar neerae allavo
    aatharavatta enakku pakkappalam neerae allavo – 2
    pakkappalam neerae allavo
    jeeva oli neerae allavo – 2

  • Theyvattuk Kuttikku Pan Muti Suuttitum தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

    1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
      இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
      உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
      சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.
    2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
      கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
      பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
      பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.
    3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
      போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
      ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
      விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.
    4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
      சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
      பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
      சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

    Theyvattuk Kuttikku Pan Muti Suuttitum Lyrics in English

    1. theyvaattuk kuttikku pan muti sootdidum
      innisaiyaayp paerosaiyaay vinn geetham mulangum
      ullamae pottidu, unakkaay maanntooraam
      sathaakaalamum avarae oppatta vaentharaam.
    2. anpaarntha karththarkku pan muti sootdidum
      kai kaal vilaavin kaayangal vinnnnilum viyangum.
      paarpparo thootharum aerittak kaayangal?
      pannivarae saashdaangamaay mooduvar tham kannkal.
    3. samaathaanak karththar! pan muti sootdidum
      por oynthu jepa sthothramae poomiyai nirappum
      aalvaar ententaikkum aalum evvidamum
      vinn loka paakkiya sirappu vilangi valarum.
    4. aanndaanndum aalvorkku pan muti sootdidum
      saraasarangal sishtiththor unnatha theyvamum
      paavikkaay aaruyir eentha en meetparae,
      sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.
  • Theyvamae Iyaesuvae தெய்வமே இயேசுவே

    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. உலப் பெருமை இன்பமெல்லாம்
      உமக்காய் இழந்தேனையா
      உம்மைப் பிரிக்கும் பாவங்களை
      இனிமேல் வெறுத்தேனையா
      உம் சித்தம் நிறைவேற்றுவேன்
      உமக்காய் வாழ்ந்திடுவேன்
    2. எதை நான் பேசவேண்டுமென்று
      கற்றுத் தாருதையா
      எவ்வழி நடக்க வேண்டுமென்று
      பாதை காட்டுமையா
      ஒளியான தீபமே
      வழிகாட்டும் தெய்வமே
    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
      உம்மில் மகிழ்ந்திருப்பேன்
      காரணமின்றி பகைக்கட்டுமே
      கர்த்தரைத் துதித்திடுவேன்
      சிலுவை சுமந்தவரை
      சிந்தையில் நிறுத்துகிறேன்

    Theyvamae Iyaesuvae Lyrics in English

    theyvamae Yesuvae ummaith thaedukiraen
    thinam thinam ummaiyae Nnokkip paarkkiraen
    sthoththiram sthoththiram sthoththiram – 2

    1. ulap perumai inpamellaam
      umakkaay ilanthaenaiyaa
      ummaip pirikkum paavangalai
      inimael veruththaenaiyaa
      um siththam niraivaettuvaen
      umakkaay vaalnthiduvaen
    2. ethai naan paesavaenndumentu
      kattuth thaaruthaiyaa
      evvali nadakka vaenndumentu
      paathai kaattumaiyaa
      oliyaana theepamae
      valikaattum theyvamae
    3. ulakam veruththu paesattumae
      ummil makilnthiruppaen
      kaaranaminti pakaikkattumae
      karththaraith thuthiththiduvaen
      siluvai sumanthavarai
      sinthaiyil niruththukiraen
  • Theyva Aattukkuttiyae தெய்வ ஆட்டுக்குட்டியே

    1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
      லோகத்தாரின் மீட்பரே,
      உம்மால் மீட்கப்பட்ட நான்
      தேவரீர்க்கு அடியான்
      நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
      ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
    2. கர்த்தரே, என் உள்ளத்தில்
      அருள் தந்தென் மனதில்
      அந்தகாரம் நீங்கிட,
      அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
      ஆவியின் நல் ஈவையும்
      பூர்த்தியாக அளியும்.
    3. எந்த நாழிகையிலே
      நீர் வந்தாலும், இயேசுவே,
      உம்மையே நான் சந்திக்க,
      கண்ணால் கண்டு களிக்க,
      நான் விழித்திருக்கவே
      நித்தம் ஏவிவாருமே.

    Theyva Aattukkuttiyae Lyrics in English

    1. theyva aattukkuttiyae,
      lokaththaarin meetparae,
      ummaal meetkappatta naan
      thaevareerkku atiyaan
      neer en kottaை, thanjamaam,
      aar en vaalvai neekkalaam?
    2. karththarae, en ullaththil
      arul thanthen manathil
      anthakaaram neengida,
      anpin theepam svaalikka,
      aaviyin nal eevaiyum
      poorththiyaaka aliyum.
    3. entha naalikaiyilae
      neer vanthaalum, Yesuvae,
      ummaiyae naan santhikka,
      kannnnaal kanndu kalikka,
      naan viliththirukkavae
      niththam aevivaarumae
  • Thevai Nirainthavar Yesu Deva தேவை நிறைந்தவர் இயேசு தேவா

    தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
    தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
    வேளையில் தந்திடுமே .. இந்த

    1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
      எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
      கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே
    2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
      திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
      எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே
    3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
      நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
      ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

    Thevai Nirainthavar Yesu Deva Lyrics in English
    thaevai nirainthavar Yesu thaevaa vallamaithanthidumae
    thaevaikal santhikka aettathor vallamai
    vaelaiyil thanthidumae .. intha

    1. thaevaimikka oru naattinaith thantheer vallamaithanthidumae
      eththanai mathangal eththanai theyvangal
      karththarae theyvam ente kaatta vallamai thanthidumae
    2. naadukal naduvinil amaithiyae illai vallamaithanthidumae
      thirappin vaasalil nintu kalaippinti pulampida
      engalai eluppidumae thaevaa vallamai thanthidumae
    3. niththiya naattukku makkalaich serkka vallamaithanthidumae
      nilaiyillaa ulakinil nilainirkum semippu
      aaththumaakkal mattumae thaevaa vallamai thanthidumae
  • Theva Thaayin Maatham Ithu தேவ தாயின் மாதம் இது அல்லவோ

    தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை

    சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா — 2

    பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை

    புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே — 2

    ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி

    ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே —தேவ தாயின்

    தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை

    சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் — 2

    கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து –2

    கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் — தேவ தாயின்

    ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க

    ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே – 2

    இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் – 2

    இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் — தேவ தாயின்


    Theva Thaayin Maatham Ithu Lyrics in English
    thaeva thaayin maatham ithu allavo..! ithai

    sirappaay konndaatidavae purappattu vaareer tholaa — 2

    poovilulla maanidarkku thaevasuthan thantha annai

    punnnniya varangal ellaam konnda annaiyae — 2

    aavaludan naam ellorum thaevamari paatham kooti

    aanantha mikuntha pala geethangalaip paaduvomae —thaeva thaayin

    thottangalil ulla pala vaattamillaa pushpangalai

    sodu sodaay serththu nalla maalai kattuvom — 2

    koottamaaka ellaam sernthu veettilulla paerai serththu –2

    koyilukku saayum vaelai aavaludan povom vaareer — thaeva thaayin

    ovvoru veettarkalellaam ovvoru naal sirappikka

    oppanthamae seythaal oru thappumillaiyae – 2

    ivvithamae seythaal palan evvalavo kootivarum – 2

    intha maatham ellorukkum nalla varam sernthu varum — thaeva thaayin

  • Thettraravaalan Yesuve தேற்றரவாளன் இயேசுவே

    தேற்றரவாளன் இயேசுவே
    என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2
    தாயைப் போலத் தேற்றுகிறீர்
    தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
    தேற்றரவாளன் இயேசுவே
    என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

    1. வனாந்தரமான வாழ்க்கையிலே
      வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2
      பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
      கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
    2. இருண்ட வாழ்க்கை பாதையிலே
      இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2
      இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
      அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் – 2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
    3. மனுஷரின் வார்த்தை மாறாகி
      மனதினில் துயரங்கள் அழுத்துகையில் -2
      மாராவின் கசப்பை மதுரமாக்கி
      மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் –2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே –2
      தாயைப் போலத் தேற்றுகிறீர்
      தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

    Thettraravaalan Yesuve Lyrics in English
    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae – 2

    thaayaip polath thaettukireer
    thanthaip pol tholil sumakkinteer – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. vanaantharamaana vaalkkaiyilae
      valiyinti thavikkum naeraththilae – 2
      pakainjarkal soolnthidum naeraththinil
      kadalinil tharaivali thanthavar neer – 2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. irunnda vaalkkai paathaiyilae
      innalkal soolnthitta naeraththilae – 2
      iravilum pakalilum neer enakku
      akkini sthampam maeka sthampam – 2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. manusharin vaarththai maaraaki
      manathinil thuyarangal aluththukaiyil -2
      maaraavin kasappai mathuramaakki
      makimaiyin vaarththaiyaal makilachcheytheer -2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae -2

    thaayaip polath thaettukireer
    thanthaip pol tholil sumakkinteer – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

  • Thesathin Kaarirulai Nikita தேசத்தின் காரிருளை நீக்கிட வா

    தேசத்தின் காரிருளை நீக்கிட வா
    எழுப்புதல் தீபத்தை ஏற்றிட வா
    இருளில் தடுமாறும் இந்தியரை
    இயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா

    எழுந்து வா… வாலிபனே
    தேவனின் சேனையில் சேர்ந்திட வா
    தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா

    புதிய சரித்திரம் படைத்திடுவோம்
    புனிதரை அறிமுகப்படுத்திடுவோம்
    புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம்
    புண்ணியரின் வழியில் நடத்திடுவோம்

    மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம்
    நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம்
    இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம்
    உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம்

    பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம்
    சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
    சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம்

    பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம்
    பார் எங்கும் அவர் நாமம் பறைசாற்றுவோம்
    பரிசுத்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
    பரிசுத்தர் ஜாதியாய் எழும்பிடுவோம்


    Thesathin kaarirulai nikita Lyrics in English
    thaesaththin kaarirulai neekkida vaa
    elupputhal theepaththai aettida vaa
    irulil thadumaarum inthiyarai
    Yesuvin oliyanntai serththida vaa

    elunthu vaa… vaalipanae
    thaevanin senaiyil sernthida vaa
    thaesaththai suthantharikka elunthu vaa

    puthiya sariththiram pataiththiduvom
    punitharai arimukappaduththiduvom
    puvithanil avar naamam uyarththiduvom
    punnnniyarin valiyil nadaththiduvom

    mariththorai vittu naam elumpiduvom
    niththiya jeevanai aenthi selvom
    irulin athikaaram thakarththiduvom
    ulakirku oliyaay maariduvom

    parisuththamaay naam vaalnthiduvom
    Yesuvai ulakirkuk kaatdiduvom
    saththiyaththin saatchikalaay vaalnthiduvom
    sathruvin kottaைyai thakarththiduvom

    parisuththa aaviyil nirainthiduvom
    paar engum avar naamam paraisaattuvom
    parisuththar Yesuvai uyarththiduvom
    parisuththar jaathiyaay elumpiduvom