Category: Tamil Worship Songs Lyrics

  • நான் பிள்ளை அடிமை Nan pillai atimai

    நான் பிள்ளை அடிமை இல்லை
    இராஜாதி இராஜாவின் செல்லபிள்ளை
    பயம் எனக்கு இல்லை கவலை இல்லை
    சர்வவல்ல தேவன் எனது தந்தை

    ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதை
    விற்று போட்டான் பாவத்திற்கு
    இரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன்
    மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு

    இயேசு வந்தார் உலகத்திற்கு
    முழுவதுமாய் நம்மை மீட்பதற்கு
    நன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அது
    மிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு

    பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோர
    சிலுவயை சுமந்தார் கல்வாரிக்கு
    சாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனது
    இரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு

    மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்து
    விடுதலை தந்தார் மக்களுக்கு
    மீண்டும் ஆளுகை தந்தார்
    மீட்டெடுத்து நான்
    மிகப்பெரிய தலைவலி சாத்தானுக்கு


    nan pillai atimai illai
    irajathi irajavin sellapillai
    payam enakku illai kavalai illai
    sarvavalla thevan enathu thanthai

    aalukai thanthar aathamukku athai
    virru pottan pavaththirku
    iraiyay vizhunthan sapaththirku manithan
    mel aalukai vanthathu saththanukku

    iyesu vanthar ulakaththirku
    muzhuvathumay nammai mitpatharku
    nanmaikal seythar janangkalukku athu
    mikavum pitikkum en iyesuvukku

    patukal pattar en pavaththirku kora
    siluvayai sumanthar kalvarikku
    sapamanar ennai uyarththuvatharku thanathu
    iraththam sinthinar ennai mitpatharku

    maranaththai jeyiththar uyirththezhunthu
    vituthalai thanthar makkalukku
    mintum aalukai thanthar
    mittetuththu nan
    mikapperiya thalaivali saththanukku


  • மகிழ்ந்து கொண்டாடுவேன் Makizhnthu kontatuven

    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    நீர் என் யெகோவா ரஃபா
    சுகம் தரும் தெய்வம் உந்தன்
    தழும்புகளால் சுகமானேன் எந்தன்
    பெலவீனமும் என்னில் இல்லை
    அதனால் கொண்டாடுவேன்
    ஆடிப்பாடுவேன்

    அதனால் கொண்டாடுவேன்
    ஆடிப்பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    நீர் என் யெகோவா யீரே என்
    தேவைகளை சந்திப்பவர் உந்தன்
    ஐசுவரியத்தின்படியே என்
    குறைவுகளை நிறைவாக்கினீர்

    சர்வ வல்லவர் எல்ஷடாய்
    மிகவும் அதிகமானவர்
    நினைப்பதற்கும் மேலாய்
    அதிகம் கொடுப்பவர்

    ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்
    பரிபூரணத்தை நான் அடைகிறேன்
    நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு
    எந்த குறைவும் இல்லை


    Makizhnthu kontatuven
    makizhnthu kontatuven
    aatip patuven aatip patuven
    alleluya alleluya
    alleluya alleluya

    nir en yekova rapa
    sukam tharum theyvam unthan
    thazhumpukalal sukamanen enthan
    pelavinamum ennil illai

    athanal kontatuven
    aatippatuven
    athanal kontatuven
    aatippatuven
    alleluya alleluya
    alleluya alleluya

    nir en yekova yire en
    thevaikalai santhippavar unthan
    aisuvariyaththinpatiye en
    kuraivukalai niraivakkinir

    sarva vallavar elshatay
    mikavum athikamanavar
    ninaippatharkum melay
    athikam kotuppavar

    aasirvathaththal pelan konten
    paripuranaththai nan ataikiren
    nan raja vittup pillai enakku
    entha kuraivum illai


  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி – உம்


    um siththam pol ennai enrum
    tharparane nir nataththum
    en siththamo onrum ventam
    en piriyane en iyesuve
    en siththamo onrum ventam
    en piriyane en iyesuve

    thiru marpil nan sarnthituven
    maru pirayana kalam varai
    parane unthan thirusiththaththai
    arivathallo thuyavazhi
    parane unthan thirusiththaththai
    arivathallo thuyavazhi – um


  • உலகோர் உன்னை Ulakor unnai

    உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
    திகையாதே மனமே
    உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
    கலங்காதே மனமே
    திகையாதே கலங்காதே
    நான் உன்னை தாங்கிடுவேன்
    என்றும் தாங்கி நடத்துவேன்

    மலைகள் விலகிடும்
    பர்வதம் அகன்றிடும்
    என் கிருபையே சூழ்ந்திடுமே
    விலகாது காத்திடுமே

    தாய் தந்தை மறந்தாலும்
    நான் உன்னை மறவேனே
    என் உள்ளங்கையில் வரைந்தேனே
    விலகாது காத்திடுவேன்


    Ulakor unnai pakaiththitum neram
    thikaiyathe maname
    ulakor unnai veruththitum neram
    kalangkathe maname
    thikaiyathe kalangkathe
    nan unnai thangkituven
    enrum thangki nataththuven

    malaikal vilakitum
    parvatham akanritum
    en kirupaiye suzhnthitume
    vilakathu kaththitume

    thay thanthai maranthalum
    nan unnai maravene
    en ullangkaiyil varainthene
    vilakathu kaththituven


  • என் தனிமையில் En thanimaiyil

    என் தனிமையில் என் வேதனையில்
    நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
    என் துயரத்தில் என் அழுகையில்
    நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
    உம்மைப்போல் யாருண்டு என் நேசரே
    என் இயேசுவே

    என் உறவுகள் என்னை மறந்தாலும்
    நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
    என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
    நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர்

    என் பாவத்தை என் சாபத்தை
    நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
    உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
    உம் வீட்டிலே என்றும் தங்குவேன்


    En thanimaiyil en vethanaiyil
    nir oruvare ennai thangkinir
    en thuyaraththil en azhukaiyil
    nir oruvare ennai therrinir
    ummaippol yaruntu en nesare
    en iyesuve

    en uravukal ennai maranthalum
    nir oruvare ennai anaippire
    en nanparkal ennaip pirinthalum
    nir oruvare ennotirukkirir

    en pavaththai en sapaththai
    nir oruvare sumanthukkontire
    um pillaiyay enrum ummutan
    um vittile enrum thangkuven


  • அனுப்பும் புது அக்கினியை Anuppum puthu akkiniyai

    அனுப்பும் புது அக்கினியை
    கேளும் என் கோரிக்கையை
    நெருப்பாற்றை போல உற்றிடும்
    அக்கினியை

    பசித்தாகத்தால் நிறைந்தோம்
    ஆவலோடு பார்க்கின்றோம்
    நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும்
    அக்கினியால் நிரப்பும்,
    எங்கள் ஆவியை அனல்மூட்டும்
    அக்கினியால் நிரப்பும்

    உம் வழியை விட்டு சென்றோம்
    கருத்தற்றே நின்றார்
    ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்று
    பொழிந்தார் உம் அருளையே
    எங்கள் ஆவியை அனல்மூட்டும்
    அக்கினியால் நிரப்பும்

    நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும்
    மறுமலர்ச்சி செயல்படுத்துமே
    பிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும்
    அக்கினியால் நிரப்பும், நிரப்பும்


    Anuppum puthu akkiniyai
    kelum en korikkaiyai
    nerupparrai pola urritum
    akkiniyai

    pasiththakaththal nirainthom
    aavalotu parkkinrom
    nampikkai uuttum irakkam tharum
    akkiniyal nirappum
    engkal aaviyai analmuttum
    akkiniyal nirappum

    um vazhiyai vittu senrom
    karuththarre ninrar
    aathi anpal ennai santhiththu anru
    pozhinthar um arulaiye
    engkal aaviyai analmuttum
    akkiniyal nirappum

    niraivay ventum palanum anpum
    marumalarssi seyalpatuththume
    pirakasikkavum aaviyai uurrum
    akkiniyal nirappum nirappum


  • ராக்கெட் விண்ணை Rakket vinnai

    ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே
    ஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதே
    அனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டு
    நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்
    நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோ
    உலகத்தை விட்டு செல்கையில்

    யார் முகம் காண்பாய் என்றறிவாயோ
    இயேசுவின் அன்பை சேர்வாயோ

    ஆதியின் உலகத்தைப் படைத்தவர்
    படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர்
    நோக்கத்துடன் செயல்படுத்தினாரே
    எதை நோக்கி செல்கிறாய்


    Rakket vinnai nokki selluthe
    jast katal thanti selluthe
    anaiththukkum oru kurikol untu
    ni engku selkiray ni engku selkiray
    ni engku selkiray enrituvayo
    ulakaththai vittu selkaiyil

    yar mukam kanpay enrarivayo
    iyesuvin anpai servayo

    aathiyin ulakaththaip pataiththavar
    pataiththavar anaiththaiyum aalpavar
    nokkaththutan seyalpatuththinare
    ethai nokki selkiray


  • இது தெரியாதா Ithu theriyatha

    இது தெரியாதா… கேட்டதில்லையா
    இது புரியாதா – கேட்டதில்லையா
    பூமி முழுவதும் படைத்த தேவன்
    களைப்படைவதில்லை
    பாராட்டுகுரிய அறிவுள்ளவர்
    சோர்ந்து போவதில்லை

    இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
    வாலிபர்கள் தடுமாறி விழுந்து போவார்கள்
    கர்த்தரை நம்பிடும் மனிதரிடம்
    ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே

    கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெறுவார்கள்
    கழுகு போல் சிறகடித்து உயர உயர பறப்பார்கள்
    ஓடினாலும் களைப்படையார்
    நடந்தாலும் சோர்வடையார்

    சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழ்கின்றார்
    வலிமையில் சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்
    இரவும் பகலும் காக்கின்றார்
    எந்நேரமும் காக்கின்றார்


    Ithu theriyatha kettathillaiya
    ithu puriyatha – kettathillaiya
    pumi muzhuvathum pataiththa thevan
    kalaippataivathillai
    parattukuriya arivullavar
    sornthu povathillai

    ilainyarkal ilaippatainthu sornthu povarkal
    valiparkal thatumari vizhunthu povarkal
    karththarai nampitum manitharitam
    aarralum sakthiyum perukituthe

    karththarukku kaththiruppor puthu pelan peruvarkal
    kazhuku pol sirakatiththu uyara uyara parapparkal
    ootinalum kalaippataiyar
    natanthalum sorvataiyar

    sorvurra nerangkalil pelan kotuththu makizhkinrar
    valimaiyil samayangkalil vallamai peruka seykinrar
    iravum pakalum kakkinrar
    enneramum kakkinrar


  • பரலோகமே பரலோகமே Paralokame paralokame

    பரலோகமே பரலோகமே
    பேரின்பம் பேரின்பமே
    தினந்தோறுமே தினந்தோறுமே அங்கு
    ஆனந்தம் ஆனந்தமே
    ஓஹோ … பேரின்பம் போரின்பமே

    இயேசு ராஜா அழகையெல்லாம்
    ஒவ்வொன்றாக ரசித்திடுவேன்
    அப்பப்பா என்ன சந்தோஷமே
    எப்படி நான் சொல்லுவேன்

    அவர் மடியில் அமர்ந்திடுவேன்
    மார்பினிலே சாய்ந்திடுவேன்
    கட்டிப்பிடித்து முத்தம் செய்வேன்
    எந்நாளும் களிப்பூருவேன்

    கவலையில்ல கண்ணீரில்ல
    கஷ்ட நஷ்டம் அங்கு இல்ல
    எப்போதும் அங்கு சந்தோஷமே
    எந்நாளும் கொண்டாட்டமே


    Paralokame paralokame
    perinpam perinpame
    thinanthorume thinanthorume angku
    aanantham aananthame
    ooho perinpam porinpame

    iyesu raja azhakaiyellam
    ovvonraka rasiththituven
    appappa enna santhoshame
    eppati nan solluven

    avar matiyil amarnthituven
    marpinile saynthituven
    kattippitiththu muththam seyven
    ennalum kalippuruven

    kavalaiyilla kannirilla
    kashta nashtam angku illa
    eppothum angku santhoshame
    ennalum kontattame


  • நீ பயப்படாதே நான் Ni payappatathe nan

    நீ பயப்படாதே நான்
    உன்னோடு இருக்கின்றேன்
    திகையாதே நான் உன் தேவன்
    நான் உன்னை பெலப்படுத்தி சகாயம்
    பண்ணிடுவேன்
    என் நீதியின் வலது கரத்தால்
    உன்னை தாங்குவேன் நான்
    உன்னை தாங்குவேன்


    Ni payappatathe nan
    unnotu irukkinren
    thikaiyathe nan un thevan
    nan unnai pelappatuththi sakayam
    pannituven
    en nithiyin valathu karaththal
    unnai thangkuven nan
    unnai thangkuven