- தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன். - சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன். - பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
பாதையை தவறிடினும்,
கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா! - மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா! தற்காத்தருள்வாய். - ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன். - மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?
Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே Lyrics in English
Devanbibn Vellamae
- theyvanpin vellamae, thiruvarul thottamae,
meym manathaananthamae!
seyya ninsempaatham sevikka iv vaelai
ayyaa, nin ati panninthaen. - sontham unathallaal sora vali sella
enthaay thunnivaeno yaan?
punthikkamalamaam poomaalai korththu nin
porpatham pitiththuk kolvaen. - paavach settil palavaelai palamintip
paathaiyai thavaritinum,
koovi viliththam than maarpodannaiththanpaay
kothu poruththa naathaa! - moorkkakunam kopam lokam sittinpamum
moka aekkamaanathaith
thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil
tharparaa! tharkaaththarulvaay. - aasai paasam pattu aavalaay ninthirup
poosaippeedam pataippaen!
mosa valithanai muttum akatti en
naesanae ninaith tholuvaen. - maranamo, jeevano, marumaiyo, poomiyo,
makimaiyo, varungaalamo,
pira sirushtiyo, uyarnthatho, thaalnthatho,
piriththidumo theyvanpai?
Leave a Reply
You must be logged in to post a comment.