தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)
- சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே - கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே - கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே
Devane En Nanbane Enakkai Lyrics in English
thaevanae en nannpanae
enakkaay mariththeerae (2)
siluvai nilalil naan thinamum
marainthu ilaippaaruvaen (2)
- siluvaiyin maraivinil naesarin arukil
kirupaiyin karaththinil aaruthal kanntaen
thaeninum iniya ennaesarin
anpai naan eppati solliduvaen
theerkkum en ithayaththin aavalai
innalkal maranthiduvaen entum naan – thaevanae
- kaarmaekam pol enpaavangal ellaam manniththaar
ennaavilae puthuppaadal thanthu thaettinaar
moolkiyae thallum kadal aalaththai
en thaevan akantida seythaarae
sontha than jeevanaiyum paaraamal
enakkaay maannda thaevanai paaduvaen – thaevanae
- kalvaariyil jeevan thantha naesar Yesuvae
annai thanthai yaavarilum maelaay anpu koornthaar
antha Yesuvin anpaip paadavae
aayiram naavukal pothaathaiyaa
thaettiyae aatti ennaith thaanguvaar
avarin anpae pothumae ententum – thaevanae
Leave a Reply
You must be logged in to post a comment.