பல்லவி
தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)
சரணங்கள்
- அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ
- பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (2) – தேவ
- இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார் செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே இனியராய் இரங்கி நலமது புரிய நாடியே வந்தனரே (2) – தேவ
- தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே கருணையின் கோனே காசரு மணியே கனிவோடு அருள் புரிவீர் (2) – தேவ
- பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார் பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி பாங்குடன் தாங்கிடுவார் (2) – தேவ
Devasudhan Krishthyesu Emai Meetkave Lyrics in English
pallavi
thaevasuthan kiristhaesu emai meetkavae vanthaar
aelaiyaraay paavikatkor iratchakaraay nirpaar (2)
saranangal
- anpinukku anpaaka avaniyil vanthuthiththaar
antu pala vaan thoothar aarppariththaep paada
avaniyil palavum athisayam nikala
arumaiyaay vanthuthiththaar (2) – thaeva
- paavaththaal nonthavarkku parama vaiththiyaraanaar
aethumatta aelaikatku irunithiyaanaarae
thunpuruvorkku thunpangal thutaiththu
thunnaivaraay annaiththidavae (2) – thaeva
- ivvulakor eetaera parakathi vittu vanthaar sevviya nal upathaesam seer pera aliththidavae iniyaraay irangi nalamathu puriya naatiyae vanthanarae (2) – thaeva
- thannuyiraip pali koduththu narar uyir kaaththidavae paavikalaip parivudanae paralokam serththidavae karunnaiyin konae kaasaru manniyae kanivodu arul puriveer (2) – thaeva
- pollaatha sinthaikalaal nirainthitta ullamathai nalvalikkaay thiranthu vaiththaal iyaesathil pukunthiduvaar paavangal neenga parisuththappaduththi paangudan thaangiduvaar (2) – thaeva
Leave a Reply
You must be logged in to post a comment.