ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
- கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு - அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு - இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு - அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு - மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு
Ezhai Manu Uruvai Edutha Lyrics in English
aelai manu uruvai eduththa
Yesu raajan unnanntai nirkiraar
aettuk kol avaraith thallaathae
- kaikalil kaalkalil aannikal kadaava
kadum mul muti pon sirasil sootida
kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar
sonthamaana iraththam sinthinaar unakkaay
kanivudanae unnai alaikkiraarae – aelai manu - avar thalaiyum saaykkavo sthalamumillai
antu thaakaththaith theerkkavo paanamumillai
aaruthal sollavo angae oruvarillai
arumai ratchakar thongukiraar thaniyae
anthap paadukal unnai meetkavae – aelai manu - innamum thaamatham unakkaen makanae
inpa Yesuvanntai elunthu vaaraayo
intha ulakam tharakkoodaa samaathaanaththai
intu unakku tharak kaaththu nirkiraarae
annnal Yesu unnai alaikkiraarae – aelai manu - avar maranaththaal saaththaanin thalai nasunga
avar raththaththaal paavak karaikal neenga
unthan viyaathiyin vaethanaiyum oliya
neeyum saapaththinintu viduthalai ataiya
siluvaiyil jeyiththaar yaavaiyum – aelai manu - maayai ulakam athaiyum nampaathae
manumakkal manamum maarip pokumae
niththiya thaevanai naesiththaal ippothae
nichchayam santhosham pettu nee makila
nampikkaiyotae vanthiduvaay – aelai manu
Leave a Reply
You must be logged in to post a comment.