Immaanuvaelae Vaarum Vaarumae இம்மானுவேலே வாரும் வாருமே

இம்மானுவேலர் வந்தார்

  1. இம்மானுவேலே வாரும் வாருமே
    மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
    மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
    உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

  1. ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
    பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
    பாதாள ஆழம் நின்று இரட்சியும்
    வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்
  2. அருணோதயமே ஆ வாருமே
    வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
    மாந்தார ராவின் மேகம் நீக்கிடும்
    இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்
  3. தாவீதின் திறவுகோலே வாருமே
    விண் வாசலைத் திறந்து தாருமே
    ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்
    விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்
  4. மா வல்ல ஆண்டவா வந்தருளும்
    முற்காலம் சீனாய் மலைமீதிலும்
    எக்காளம் மின்னலோடு தேவரீர்
    பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்

Immaanuvaelae Vaarum Vaarumae Lyrics in English

immaanuvaelar vanthaar

  1. immaanuvaelae vaarum vaarumae
    mey isravaelaich sirai meelumae
    maa theyva mainthan thontum varaikkum
    un janam paaril aengith thavikkum

makil! makil! seeyonin sapaiyae
immaanuvaelin naal sameepamae

  1. eesaayin vaerth thulirae vaarumae
    pisaasin valla koshdam neekkumae
    paathaala aalam nintu iratchiyum
    vem saavinmael paer vetti aliyum
  2. arunnothayamae aa vaarumae
    vanthengal nenjai aattith thaettumae
    maanthaara raavin maekam neekkidum
    irunnda saavin nilal otdidum
  3. thaaveethin thiravukolae vaarumae
    vinn vaasalaith thiranthu thaarumae
    odukkamaam nalvali kaaththidum
    visaalamaam thurp paathai thoorththidum
  4. maa valla aanndavaa vantharulum
    murkaalam seenaay malaimeethilum
    ekkaalam minnalodu thaevareer
    piramaanam isravaelukkaliththeer

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply