- இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
- தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் - எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் - விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் - இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே - இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே
Irul Soolum Kaalam Lyrics in English
- irul soolum kaalam ini varuthae
arul ulla naatkal payanpaduththum
thiravunnda vaasal ataipadumun
norungunnda manathaay mun selvaar yaar ?
thiravunnda vaasal ataipadumun
norungunnda manathaay mun selvaar yaar ?
naatkal kotiyathaay maariduthae
kaalaththai aathaayam seythiduvom
- tharisu nilangal anaekam unndu
tharisanam pettaோr neer mun varuveer
parisaaka Yesuvai avarkalukkum
aliththida anpinaal elunthu selveer - eththanai naadukal innaatkalil
karththarin pannikkuththaan kathavataiththaar
thirantha vaasal intu unakkethiril
payanpaduththum makkal njaanavaankal - visuvaasikal enum koottam unndu
anpu onte avar naduvil unndu
orumanam ottumai angu unndu
entu sollum naatkal intu vaenndum - ini varum naatkalil namathu kadan
veku athikam visuvaasikalae
nammitai ulla aikkiyamae
vettiyum tholviyum aakkidumae - Yesuvae engal ullangalai
anpenum aaviyaal niraiththidumae
inthiyaavin ellaa therukkalilum
Yesuvin naamamum virainthidumae
Leave a Reply
You must be logged in to post a comment.