Iyaesuvae Ummai Thiyaaniththaal இயேசுவே உம்மை தியானித்தால்

மானிடர் மீட்பர் இயேசு

  1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே
    கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே
  2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே
    இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே?
  3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்
    நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர்
  4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்
    கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்?
  5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்
    அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்
  6. இயேசுவே எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே
    இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே

Iyaesuvae Ummai Thiyaaniththaal Lyrics in English

maanidar meetpar Yesu

  1. Yesuvae ummai thiyaaniththaal ullam kaniyumae
    kannnnaara ummaik kaanungaal paramaananthamae
  2. maanida meetpar Yesuvin seer naamam polavae
    in geetha naatham aaynthitin unntoo ippaarilae?
  3. neer norungunnda nenjukku nampikkai aakuveer
    neer saanthamulla maantharkku santhosham eekuveer
  4. kaetporkkum thaeduvorkkum neer eeveer ennanmaiyum
    kanndatainthorin paakkiyaseer yaar solla mutiyum?
  5. Yesuvin anpai unarnthu mey pakthar arivaar
    avvanpin aalam alanthu mattaோr arinthidaar
  6. Yesuvae engal mukthiyum paerinpamum neerae
    ippothum niththiya kaalamum neer engal maatchiyae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply