இயேசுவே என்னை அணைத்துக்கொள்ளும்
இயேசுவின் மார்பினில் – சாருவேனே
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே
- காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
அன்பின் சொரூபி என் இயேசு நாதா - நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே - கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில் - ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை
Iyaesuvin Maarpinil – Saaruvaenae Lyrics in English
Yesuvae ennai annaiththukkollum
Yesuvin maarpinil – saaruvaenae
thunpam thukkam kannnneer – marappaenae
- kaarirul moodum naeraththinil
karththaa um paatham annti ninten
enthanai meettida unthanai eenthirae
anpin soroopi en Yesu naathaa - neesach siluvai meethinilae
en paavam pokkath thongineerae
aaruyir naathanae eththanai vaathaikal
ennai neer manthaiyil serththidavae - kalvaari naathaa nin iraththaththai
sinthineerae ippaavikkaaka
kaikaalkal aannikal kadaavappattathae
mulmutee soottiyae nin sirasil - jeevanaith thantha en naesarae
oppuviththaen ennai umakkaay
karaththil aenthiyae porkireedam soottiyae
vinnnnilum serppeerae paaviyennai
Leave a Reply
You must be logged in to post a comment.