Jeevanulla Thaevanai Saevippaar ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்

தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான்

  1. ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
    ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
    ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
    ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே
  2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
    ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்
    திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
    பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே
  3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
    இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
    ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
    சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே
  4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
    உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்
    உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்
    சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே
  5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
    இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்
    ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
    வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

Jeevanulla Thaevanai Saevippaar Lyrics in English

than jeevanai iratchikkiravan athai ilanthu povaan

  1. jeevanulla thaevanai sevippaar yaarunntoo?
    jeevanai avarkkaay alikka ingu yaarunntoo?
    jeevanai iratchippavan ilanthu povaanae
    jeevanai veruppavano pattik kolvaanae – nammilae
  2. manithar intum ulakil vaalnthu varuvathevvaaru?
    jeevaathipathi Yesu tham jeevanai koduththathaal
    thiruchchapaiyum asthipaaram ittathevvaaru?
    parisuththarin parivaaram jeevan vittathaal – nammilae
  3. saathraak maeshaak aapaethnaeko uyarnthathevvaaru?
    iraajaavin ullaththil maattam vanthathevvaaru?
    jeevanaip panayam vaiththuth theekkul sentathaal
    silaiyai vanangath thayakkaminti maruththu nintathaal – nammilae
  4. paralokaththin paakkiyaththaip peruvor yaavarum
    upaththiravaththin kukaikkul nulainthu sentu thirumpanum
    ulakaththaiyum maenmaiyaiyum uthariththallanum
    siluvaiyai mattum eduththu sukiththirukkanum – nammilae
  5. vellai angi thariththu nirkum koottam yaar ivar?
    iraththaththil tham angikalai thoyththu veluththavar
    jeevanai veruththu siluvaiyai eduththu
    vettigeetham paadum koottam ulakil uthikkattum – nammilae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply