Kaalaiyil Devanai Thedu Jeeva காலையில் தேவனைத் தேடு – ஜீவ

காலையில் தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
சீரான நித்திய ஜீவனை நாடு — காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலையில்

வேலையுனக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலையில்


Kaalaiyil Devanai Thedu Jeeva Lyrics in English

kaalaiyil thaevanaith thaedu – jeeva
kaarunnyar paatham panninthu mantadu

anupallavi

seelamudan patham paatik konndaadu ,
seeraana niththiya jeevanai naadu — kaalaiyil

saranangal

mannuyirkkaay mariththaarae – manu
mainthanena naamam vaiththirunthaarae
un siruttikarai nee uthayaththilennnu
ullanganinthu thanijepam pannnu — kaalaiyil

paavach sothanaikalai vellu – ketta
paarudal paeyudan porukku nillu
jeeva kireedanj siraththilanniyach
sinthanai sey manuvaelanaip panniya — kaalaiyil

siruvarkal ennidanj serath -thatai
seyyaa thirungalentar manathaara
paraloka selva mavarkkup palikkum
paakkiyamellaam paranthu jolikkum — kaalaiyil

vaelaiyunakkuk kaikooda – sathya
vaethan kirupai varaththai mantada
kaalai thaeduvor enaik kanndataivaarae
kannviliththu jepanj seyyumentarae — kaalaiyil


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply