காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
சரணங்கள்
- மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் - நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் - இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? — காலத்தின் - முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? — காலத்தின்
Kaalathin Arumaiyai Arinthu Lyrics in English
kaalaththin arumaiyai arinthu
vaalaavitil kannnneer viduvaayae
anupallavi
njaalaththil paranunnai naattina Nnokkaththai
seelamaay ninaiththavar moolam pilaiththiduvaay
saranangal
- mathiyai ilanthu theeya valiyilae nee nadanthaal
varungaோpam arinthidaayo?
kathiyaam ratchannya vaalvai nee kanndu makilnthida
kaalam ithuvae nalla kaalam entariyaayo? — kaalaththin - Nnovaavin kaalaththil noottirupathu aanndu
Nnokkippin aliththaaranto?
thaavaatha kirupaiyaal thaangi unakkaliththa
thavannaiyin kaalamiv varuda mutiyalaamae — kaalaththin - ikaththinil ooliyam akaththinil niraivaera
yaesunai alaiththaarallo,
makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal
pakarkaala mutiyum raakkaalaththilenna seyvaay? — kaalaththin - munthina eraemiyaa ananiyaavuk kuraiththa
mutivai nee ariyaayo?
enthak kaalamum siranjaீvi yentennnnidaamal
aetta aayaththamaay eppothum irunthidaayo? — kaalaththin
Leave a Reply
You must be logged in to post a comment.