Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து

காலத்தின் அருமையை அறிந்து

வாழாவிடில் கண்ணீர் விடுவாயே

அனுபல்லவி

ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை

சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

சரணங்கள்

  1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
    வருங்கோபம் அறிந்திடாயோ?
    கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
    காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின்
  2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
    நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
    தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
    தவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின்
  3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
    யேசுனை அழைத்தாரல்லோ,
    மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
    பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? — காலத்தின்
  4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
    முடிவை நீ அறியாயோ?
    எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
    ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? — காலத்தின்

Kaalathin Arumaiyai Arinthu Lyrics in English

kaalaththin arumaiyai arinthu

vaalaavitil kannnneer viduvaayae

anupallavi

njaalaththil paranunnai naattina Nnokkaththai

seelamaay ninaiththavar moolam pilaiththiduvaay

saranangal

  1. mathiyai ilanthu theeya valiyilae nee nadanthaal
    varungaோpam arinthidaayo?
    kathiyaam ratchannya vaalvai nee kanndu makilnthida
    kaalam ithuvae nalla kaalam entariyaayo? — kaalaththin
  2. Nnovaavin kaalaththil noottirupathu aanndu
    Nnokkippin aliththaaranto?
    thaavaatha kirupaiyaal thaangi unakkaliththa
    thavannaiyin kaalamiv varuda mutiyalaamae — kaalaththin
  3. ikaththinil ooliyam akaththinil niraivaera
    yaesunai alaiththaarallo,
    makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal
    pakarkaala mutiyum raakkaalaththilenna seyvaay? — kaalaththin
  4. munthina eraemiyaa ananiyaavuk kuraiththa
    mutivai nee ariyaayo?
    enthak kaalamum siranjaீvi yentennnnidaamal
    aetta aayaththamaay eppothum irunthidaayo? — kaalaththin

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply