Kalvariye Kalvariye Kal Manam கல்வாரியே கல்வாரியே கல் மனம்

கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

  1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
    பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
  2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
  3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
    பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
  4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
    கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
  5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
  6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
    பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
  7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
    எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye Kal Manam Lyrics in English

kalvaariyae kalvaariyae
kal manam urukkidum kalvaariyae – en

  1. paavi thuroki sanndaalan naanaayinum
    paathakam pokkip parivudan iratchiththa – kalvaariyae
  2. paaviyai meetkavae naayakan Yesu tham
    jeevanin iraththaththaich sinthina unnatha – kalvaariyae
  3. naathan enakkaaka aatharavattaோraayp
    paathakar maththiyil paathakan pol thongum – kalvaariyae
  4. mulmuti sootiyae koor aanni meethilae
    kallanai pola en naayakan thongidum – kalvaariyae
  5. sarvam pataiththaalum sorloka naayakan
    karmaththin kolamaay nirpathaik kaannpaeno – kalvaariyae
  6. ennnum nanmai aethum ennilae illaiyae
    pinnai aen naesiththeer ennai en pon naathaa – kalvaariyae
  7. ivvitha anpai naan engumae kaanneenae
    evvitham ithargeedu aelai naan seykuvaen – kalvaariyae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply