- கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை. - அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது. - உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக!
விசாரிப்பார், அமர்ந்திரு.
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர். - சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்;
தீவிரமாயத் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும். - நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது. - கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார். - மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக,
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
Karthavai Nalla Bakthiyaale Lyrics in English
- karththaavai nalla pakthiyaalae
eppothum nampum neethimaan
eththeengilaeyum avaraalae
anpaayk kaappaattappaduvaan;
unnathamaana karththarai
saarnthorukkavar kanmalai. - aluththum kavalaikalaalae
palan aethaakilum unntoo?
naam niththam sanjalaththinaalae
thavippathu uthavumo?
visaaraththaalae namakku
ikkattathikarikkuthu. - un kaariyaththai nalamaaka
thiruppa vallavarukku
nee athai oppuvippaayaaka!
visaarippaar, amarnthiru.
maa thittamaayth thayaaparar
un thaalchchiyai arinthavar. - santhoshippikkiratharkaana
naal ethentavar arivaar;
anaeka narkunangal kaana
anthantha vaelai thanntippaar;
theeviramaayath thirumpavum
theyvanpu poorippaith tharum. - nee karththaraal kaividappattaோn
entapaththil ninaiyaathae;
eppothum paadum Nnovumattaோn
piriyanentum ennnnaathae;
anaeka kaariyaththukku
pin maaruthal unndaakuthu. - kathiyullonai aelaiyaakki
makaa eliyavanaiyo
thiraviya sampannanaakki
uyarththa svaamikkaritho?
thaalvaakkuvaar, uyarththuvaar,
atikkiraar, annaikkiraar. - mantatip paati kiristhonaaka
nadanthukonndun vaelaiyai
nee unnmaiyotae seyvaayaaka,
appo theyvaaseervaathaththai
thirumpak kaannpaay neethimaan
Leave a Reply
You must be logged in to post a comment.