கற்றுத் தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
- என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும்கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே - போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானய்யா - தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமைமேல் மகிமை தருகின்றீர்
மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் - ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே - முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
தினம் தினம் தேற்றும் துணையாளரே
எனையாண்டு நடத்தும் மணவாளரே - உலகம் உம்மை அறிவதில்லை
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்
Katru Thanthu Nadathugireer Lyrics in English
kattuth thanthu nadaththukireer
kanntiththu unarththi pothikkireer
aaviyaanavarae thooya aaviyaanavarae
- ententaikkum engaludan
eppothumkooda irukkinteer
saththiya aaviyaanavarae
saatchiyaay vaalach seypavarae - pothikkinteer saththiyangalai
ninaivoottukinteer vasanangalai
anaiththaiyum sollith tharukinta
aalosakar neerthaanayyaa - thaevanukkukantha paliyaaka
arppana vaalvu naan vaala
makimaimael makimai tharukinteer
maruroopamaakki makilkinteer - ooliyam seyya piriththeduththu
ulakengum thoothu anuppukireer
narseythi arulum naayakarae
ursaakappaduththum unnatharae - mulu unnmai Nnokki nadaththukireer
varappokum anaiththum therivikkireer
thinam thinam thaettum thunnaiyaalarae
enaiyaanndu nadaththum manavaalarae - ulakam ummai arivathillai
pettuk kolla mutivathillai
engalukkul neer jeevikkinteer
ithayath thutippaay iyangukinteer
Leave a Reply
You must be logged in to post a comment.