- கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே
- நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே - நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால் - வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை - பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே
Kirubai Irakkam Nirainthavor Lyrics in English
- kirupai irakkam nirainthavor
kirupaasanam aa thontiduthae
tharunamaethum engilum nalla
sakaayam pettida aettathuvae
kirupaiyae perukuthae
kalvaariyinintum paaynthiduthae
ennullam nantiyaal pongi valiyuthae
enna en paakkiyamithae
- nammaip polavae sothikkap pattum
naathanor paavamumattavaraay
naalum nam kuraikal kanndurukum
nalla aasaariyar namakkunntae - nam pelaveenaththil avar pelan
nalkiduvaar paripooranamaay
naaduvomae maaraa kirupaiyai
namakkaakavae avar jeevippathaal - vaanangalin valiyaayp paraththil
thaanae sentu Yesuvaa memathu
maa pirathaana aasaariyaraip
pattiduvom Nnokki nampikkaiyai - pithaavanntai serum suththar katkaay
sathaaparinthu paesiyae nirpor
itho emmaiyae muttumutiya
iratchikka vallamaiyullavarae
Leave a Reply
You must be logged in to post a comment.