Blog

  • Nambikaiku Uriyavare நம்பிக்கைக்கு உரியவரே

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்

    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே

    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு

    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்

    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்

    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்

    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்


    Nambikaiku uriyavare Lyrics in English

    nampikkaikku uriyavarae
    nampi vanthaen um samookam
    nampukiraen um vasanam

    sontha aattalai nampavillai
    thanthai ummaiyae saarnthuvittaen
    vaakkuththaththam seythavarae
    vaalkkaiyellaam vaarththaithaanae

    paathaikkuth theepam paethaikku velichcham
    unthan vasanamae
    aattal mikkathu jeevanullathu
    unthan arulvaakku

    ummai nampukinta manitharkalai
    umathu anpu entum soolnthu kollum
    ullamellaam makiluthaiyyaa
    um vasanam nampuvathaal

    theemai anaiththaiyum vittu vilaki
    umakku anji naan nadanthu konndaal
    elumpukal uram perum
    en udalum nalam perum

    puyalin naduvilae pakthan pavul
    vaarththai vanthathaal thidan konndaar
    kaithiyaaka kappal aeri
    kaepdanaaka seyalpattar

    vaarththai nampiyathaal valaikal veesi
    thiralaay paethuru meenkal pitiththaar
    um valaiyil pitipattar
    thalaivanaaka seyalpattar

  • Nambi Vanthen Yesuve Ennai Gunapaduthum நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் (4)

    வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரெ என்னும் உண்மையே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

    தான் வாழ பிறரை கெடுத்த பாவி என்னை மன்னியும்
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    மனிதரிடையே உம்மை காணும் பார்வை எனக்கு தாருமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

    வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியை தாருமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும் உணர்வு என்னில் ஊற்றுமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
    எனக்கு தீமை செய்த பேரை மன்னித்து மறக்க உதவுமே
    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்


    Nambi Vanthen Yesuve Ennai Gunapaduthum Lyrics in English

    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum (4)

    vaalvum valiyum valamum nalamum neere ennum unnmaiyae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    enathu nalamae ennnni vaalnthu paavam seythaen iranguveer
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    ullaththaalum udalinaalum utainthu ponaen paarumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum

    thaan vaala pirarai keduththa paavi ennai manniyum
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    manitharitaiyae ummai kaanum paarvai enakku thaarumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    irakkam kaatti irakkam ataiyum ithayam enakku arulumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum

    vaalvukkaana unthan vaakkai kaetkum seviyai thaarumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    unnmai ulaippil uyarnthu vaalum unarvu ennil oottumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum
    enakku theemai seytha paerai manniththu marakka uthavumae
    nampi vanthaen Yesuvae ennai kunappaduththum

  • Nambi Vanthen Mesiah Naan நம்பிவந்தேன் மேசியா

    நம்பிவந்தேன் மேசியா

    நம்பிவந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே -திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே.

    1. தம்பிரான் ஒருவனே
      தம்பமே தருவனே – வரு
      தவிது குமர குரு
      பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
    2. நின் பாத தரிசனம்
      அன்பான கரிசனம் – நித
      நிதசரி தொழுவ திதம் எனவும்
      உறுதியில் நம்பிவந்தேனே – நான்
    3. நாதனே கிருபைகூர்;
      வேதனே சிறுமைதீர் – அதி
      நலம் மிகும் உனதிரு
      திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
    4. பாவியில் பாவியே
      கோவியில் கோவியே – கன
      பரிவுடன் அருள்புரி
      அகல விடாதே நம்பிவந்தேனே.
    5. ஆதி ஓலோலமே
      பாதுகாலமே – உன
      தடிமைகள் படுதுயர் அவதிகள்
      மெத்த – நம்பிவந்தேனே – நான

    Nambi Vanthen Mesiah Naan Lyrics in English

    nampivanthaen maesiyaa

    nampivanthaen maesiyaa
    naan nampivanthaenae -thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae.

    1. thampiraan oruvanae
      thampamae tharuvanae – varu
      thavithu kumara kuru
      paramanuvaelae nampivanthaenae – naan
    2. nin paatha tharisanam
      anpaana karisanam – nitha
      nithasari tholuva thitham enavum
      uruthiyil nampivanthaenae – naan
    3. naathanae kirupaikoor;
      vaethanae sirumaitheer – athi
      nalam mikum unathiru
      thiruvati arulae nampivanthaenae – naan
    4. paaviyil paaviyae
      koviyil koviyae – kana
      parivudan arulpuri
      akala vidaathae nampivanthaenae.
    5. aathi ololamae
      paathukaalamae – una
      thatimaikal paduthuyar avathikal
      meththa – nampivanthaenae – naana
  • Nambi Vantha Yaavarukkum நம்பி வந்த யாவருக்கும்

    நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
    தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)

    இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
    இயேசு நம்மை கைவிடாதவர்
    நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
    தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்

    திக்கற்றோரின் தகப்பன் இவர்
    ஏழைகளின் தலைவன் இவர் (2)
    நம்புவோம் இயேசு ராஜனை
    பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2) – இயேசு

    பாவங்களை சாபங்களை
    சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
    ரத்தமே இயேசு ரத்தமே
    ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2) – இயேசு

    கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
    நித்திய ஜீவன் தந்திடுவார்
    நித்தமும் வழி நடத்திடுவார் (2) – இயேசு


    Nambi vantha yaavarukkum Lyrics in English

    nampi vantha yaavarukkum nanmai seypavar
    thaeti vantha yaavaraiyum vaala vaippavar (2)

    Yesu entum nallavar Yesu entum vallavar
    Yesu nammai kaividaathavar
    nampi vantha yaavarukkum nanmai seypavar
    thaeti vantha yaavaraiyum vaala vaippavar

    thikkattaோrin thakappan ivar
    aelaikalin thalaivan ivar (2)
    nampuvom Yesu raajanai
    pattikkolluvom anpu naesarai (2) – Yesu

    paavangalai saapangalai
    siluvaiyilae jeyiththelunthaar (2)
    raththamae Yesu raththamae
    jeyam tharumae intum entumae (2) – Yesu

    kannnneerellaam thutaiththiduvaar
    kaayamellaam aattiduvaar (2)
    niththiya jeevan thanthiduvaar
    niththamum vali nadaththiduvaar (2) – Yesu

  • Nambi Vantha Manitharellam நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

    நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
    நன்மைகள் ஏராளம்

    நம்புகிறேன் நம்புகிறேன்
    நம்பத்தக்க தகப்பனே

    மனிதரின் சூழ்ச்சியினின்று
    மறைத்துக் காத்துக் கொள்வீர்
    நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
    அணுகாமல் காப்பாற்றுவீர்

    என் பெலன் நீர்தானே
    என் கேடகம் நீர்தானே
    சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
    பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்

    கானானியப் பெண் ஒருத்தி
    கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்
    அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
    பாராட்டிப் புதுமை செய்தீர்

    கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம் பேரன்பு பின்தொடரும்
    கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
    காலமெல்லாம் புகழ் பாடும்

    குருடன் பர்திமேயு
    கூப்பிட்டான் நம்பிக்கையோடு
    தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று
    ஜெபித்து பார்வை பெற்றான்

    நம்பி வந்த குஷ்டரோகியை
    நலமாக்கி அனுப்பினீரே
    மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
    யவீர் உம்மை நம்பினதால்

    இக்கட்டு துன்ப வேலையில்
    காக்கும் அரணானீர்
    பூரண சமாதானம் பூரண அமைதி
    தினம் தினம் நிரப்புகிறீர்


    Nambi vantha manitharellam Lyrics in English

    nampi vantha manitharkkellaam
    nanmaikal aeraalam

    nampukiraen nampukiraen
    nampaththakka thakappanae

    manitharin soolchchiyinintu
    maraiththuk kaaththuk kolveer
    naavukalin sanntaikal avathootru paechchukkal
    anukaamal kaappaattuveer

    en pelan neerthaanae
    en kaedakam neerthaanae
    sakaayam petten uthavi petten
    paattinaal ummaith thuthippaen – naan

    kaanaaniyap penn oruththi
    kaththik konntae pinthodarnthaal
    ammaa un nampikkai periyathu entu
    paaraattip puthumai seytheer

    kirupai soolnthu kollum
    um paeranpu pinthodarum
    karththarukkul ithayam kalikoornthu thinamum
    kaalamellaam pukal paadum

    kurudan parthimaeyu
    kooppittan nampikkaiyodu
    thaaveethin makanae enakku irangum entu
    jepiththu paarvai pettaாn

    nampi vantha kushdarokiyai
    nalamaakki anuppineerae
    mariththa makalaiyae uyirperach seytheer
    yaveer ummai nampinathaal

    ikkattu thunpa vaelaiyil
    kaakkum arannaaneer
    poorana samaathaanam poorana amaithi
    thinam thinam nirappukireer

  • Nambathakka Thagappane நம்பத்தக்க தகப்பனே

    நம்பத்தக்க தகப்பனே
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    நம்பத்தக்க தகப்பனே

    வாழ்வே வழியே
    வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

    உம் சமூகம் குடியிருந்து
    சத்தியத்தை உணவாக்கினேன்
    வசனம் தியானம் செய்து உம்
    வார்த்தையால் வாழ்கின்றேன்

    இதய விருப்பமெல்லாம்
    எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
    ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
    உம்மையே சார்ந்து கொண்டேன்

    நீதி நேர்மையெல்லாம்
    பட்டப்பகல் போலாகும் -என்
    நீர் எனக்குள் இருப்பதனால்
    எல்லாம் செய்து முடிப்பீர்


    Nambathakka thagappane Lyrics in English

    nampaththakka thakappanae
    ummaiththaanae nampiyullaen
    ummaiththaanae nampiyullaen
    nampaththakka thakappanae

    vaalvae valiyae
    vaalththukiraen ummai vanangukiraen

    um samookam kutiyirunthu
    saththiyaththai unavaakkinaen
    vasanam thiyaanam seythu um
    vaarththaiyaal vaalkinten

    ithaya viruppamellaam
    eppatiyum niraivaettuveer -en
    oppataiththaen valikalellaam
    ummaiyae saarnthu konntaen

    neethi naermaiyellaam
    pattappakal polaakum -en
    neer enakkul iruppathanaal
    ellaam seythu mutippeer

  • Namathu Iyaesu Karththarenru நமது இயேசு கர்த்தரென்று

    நமது இயேசு கர்த்தரென்று
    நாவுகள் யாவும் அறிக்கையிடும் – 2

    முழங்கால் யாவும் முடங்கிடும்
    அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2
    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

    1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
      அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
      வல்லமை தேவனை நித்திய தேவனை
      ஜாதிகள் யாவும் அறிந்திடுமே
    2. ஊற்றுண்ட பரிமள தைலமவர்
      உலகில் வாசனை வீசுபவர் – 2
      ஆதியும் அவரே அந்தமும் அவரே
      நித்திய நாமம் உடையவரே
    3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
      வானோர் தலத்தோர் பணிந்திடுவார் – 2
      தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
      பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

    Namathu Iyaesu Karththarenru Lyrics in English

    namathu Yesu karththarentu
    naavukal yaavum arikkaiyidum – 2

    mulangaal yaavum mudangidum
    avar mun mulangaal mudangidum – 2
    aamen allaelooyaa aamen allaelooyaa

    1. sarvaththai aanndidum thaevanavar
      anaiththu sirushtikkum munthinavar – 2
      vallamai thaevanai niththiya thaevanai
      jaathikal yaavum arinthidumae
    2. oottunnda parimala thailamavar
      ulakil vaasanai veesupavar – 2
      aathiyum avarae anthamum avarae
      niththiya naamam utaiyavarae
    3. vaethaalam paathaalam nadungiduthae
      vaanor thalaththor panninthiduvaar – 2
      thaevaathi thaevanai raajaathi raajanai
      poomiyil geelaanor panninthiduvaar
  • Namaskaaram Thaevanae நமஸ்காரம் தேவனே

    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

    மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)
    மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2)

    புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே (2)
    போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே (2)

    எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே (2)
    எகிப்தை வென்றவரே நமஸ்காரமே (2)

    வெற்றியை தருபவரே நமஸ்காரமே (2)
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே (2)

    எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே (2)
    எகோவா தெய்வமே நமஸ்காரமே (2)

    எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே (2)
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே (2)

    குருடரை தொட்டவரே நமஸ்காரமே (2)
    வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே (2)


    Namaskaaram Thaevanae Lyrics in English

    namaskaaram thaevanae namaskaaramae
    namaskaaram thaevanae namaskaaramae

    malarkalai pataiththavarae namaskaaramae (2)
    malaikalai utaiththavarae namaskaaramae (2)

    puyalkaattaை thaduththavarae namaskaaramae (2)
    porppatai amaiththavarae namaskaaramae (2)

    erikovai itiththavarae namaskaaramae (2)
    ekipthai ventavarae namaskaaramae (2)

    vettiyai tharupavarae namaskaaramae (2)
    pattiyae eripavarae namaskaaramae (2)

    enakkullae iruppavarae namaskaaramae (2)
    ekovaa theyvamae namaskaaramae (2)

    eliyaavai eduththavarae namaskaaramae (2)
    elisaavai koduththavarae namaskaaramae (2)

    kurudarai thottavarae namaskaaramae (2)
    viyaathiyai neekkineerae namaskaaramae (2)

  • Namakkoru Thakappan Untu நமக்கொரு தகப்பன் உண்டு

    நமக்கொரு தகப்பன் உண்டு
    அவரே நம் தெய்வம்
    எல்லாமே அவரிலிருந்து வந்தன
    நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

    1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
      தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
      உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
      அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்
    2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
      ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
      கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்
    3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
      ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
      கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே
    4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
      எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்
      கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்
    5. அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்
      பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
      நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்

    Namakkoru Thakappan Untu Lyrics in English

    namakkoru thakappan unndu
    avarae nam theyvam
    ellaamae avarilirunthu vanthana
    naamo avarukkaaka vaalnthiduvom

    1. thikkatta pillaikalukku thakappan ivar
      thaevaikalai arintha nalla thanthai ivar
      unavu oottukiraar utaiyum uduththukiraar
      appaa.. appaa.. thakappanae entu kooppiduvom
    2. aatkonndu nadaththukiraar athisayamaay
      ooruvaakki makilkintar ovvoru naalum
      kaetpathai koduththiduvaar thattumpothu thiranthiduvaar
    3. irakkam niraintha thanthai avar
      aaruthal anaiththirkum oottu avar
      kanavanai ilanthavarkku kaappaalar avarthaanae
    4. kulanthaiyaay irukkumpothae naesiththavar
      ekipthil irunthu ennai alaiththukkonndar
      karangal pitiththuk konndu nadakkappalakkukiraar
    5. anpuk karangalaalae annaiththuk konndaar
      paasak kayirukalaal pinnaiththukkonndaar
      nukaththai akattivittar jeyaththai thanthuvittar
  • Namakkoru Meetpar நமக்கொரு மீட்பர்

    நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
    இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
    வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

    இனி அச்சம் என்பது இல்லை
    வானகமே நம் எல்லை
    பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

    உன்னதத்தில் மகிமை
    மனங்களில் அமைதி
    வானவர் பாடல் கேட்கிறது
    நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

    அவர் பாதம் பற்றும் நாட்கள்
    ஆதைகள் எங்கும் பூக்கள்
    அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

    காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
    மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
    எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

    இது அன்பின் காலம் எங்கும்
    புது பாதைகள் விரியும் எங்கும்
    ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்


    Namakkoru meetpar Lyrics in English

    namakkoru meetpar piranthullaar varuveer
    ilam thalir kaalai arumpidum vaelai
    vanangiduvom anpil panninthiduvom

    ini achcham enpathu illai
    vaanakamae nam ellai
    poomiyin mukamum maarum polivuperum

    unnathaththil makimai
    manangalil amaithi
    vaanavar paadal kaetkirathu
    nampikkai konntoor thaliththiran eluvar

    avar paatham pattum naatkal
    aathaikal engum pookkal
    anpin narumanam veesum amaithi perum

    kaalangal palavaay kaaththiruntha avarkal
    manam kulirum naal makilnthiduvaen
    elunthu ilam kathir akam makilnthiduvaen

    ithu anpin kaalam engum
    puthu paathaikal viriyum engum
    oru manathudanae paati vaalnthiduvom