Maeloekaththil En Panku Neer மேலோகத்தில் என் பங்கு நீர்

இயேசு என் பங்கு

  1. மேலோகத்தில் என் பங்கு நீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    மேலான நன்மை தேவரீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    நீர் பாரில் ரத்தம் சிந்தினீர் பேரன்பைக் காட்டி மரித்தீர்
    சீர்கெட்ட என்னை ரட்சித்தீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

பூலோக மேன்மை வாஞ்சியேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
மேலோக இன்பம் நாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
இப்பாரின் வாழ்வு நில்லாதே தப்பாமல் வாடிப்போகுமே
ஒப்பற்ற செல்வம் நீர் நீரே கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

  1. நீர் ஏழையேனைக் கைவிடீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    சீராகக் காத்து ஆளுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    பொன் வெள்ளி ஆஸ்தி போயினும் துன்புற்று பாடுபடினும்
    என் விசுவாசம் நிலைக்கும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
  2. தீயோன் விரோதம் செய்யினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    ஓயாமல் போராடினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன் உம்மாலே வெற்றி சிறப்பேன்
    கெம்பீர கீதம் பாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
  3. வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்ää கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    உம் நேச மார்பில் சுகிப்பேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    பேரன்பரே! கைதாங்குவீர் நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
    ஓயாப் பேரின்பம் ஈகுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

Maeloekaththil En Panku Neer Lyrics in English

Yesu en pangu

  1. maelokaththil en pangu neer kiristhuvae! kiristhuvae!
    maelaana nanmai thaevareer kiristhuvae! kiristhuvae!
    neer paaril raththam sinthineer paeranpaik kaatti mariththeer
    seerketta ennai ratchiththeer kiristhuvae! kiristhuvae!

pooloka maenmai vaanjiyaen kiristhuvae! kiristhuvae!
maeloka inpam naaduvaen kiristhuvae! kiristhuvae!
ippaarin vaalvu nillaathae thappaamal vaatippokumae
oppatta selvam neer neerae kiristhuvae! kiristhuvae!

  1. neer aelaiyaenaik kaiviteer kiristhuvae! kiristhuvae!
    seeraakak kaaththu aaluveer kiristhuvae! kiristhuvae!
    pon velli aasthi poyinum thunputtu paadupatinum
    en visuvaasam nilaikkum kiristhuvae! kiristhuvae!
  2. theeyon virotham seyyinum kiristhuvae! kiristhuvae!
    oyaamal poraatinum kiristhuvae! kiristhuvae!
    ammoorkkam kanndu anjitaen ummaalae vetti sirappaen
    kempeera geetham paaduvaen kiristhuvae! kiristhuvae!
  3. vem saavaiyum maerkolluvaenää kiristhuvae! kiristhuvae!
    um naesa maarpil sukippaen kiristhuvae! kiristhuvae!
    paeranparae! kaithaanguveer neer vinnnnil serththu vaalvippeer
    oyaap paerinpam eekuveer kiristhuvae! kiristhuvae!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply