Nandriyal Paadiduvom Nallavar Yesu நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

  1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
    எங்கள் தேவனின் கரமே
    தாங்கியதே இந்நாள் வரையும்
    தயவாய் மாதயவாய் — நன்றியால்
  2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
    மாபெருங்கிருபை
    மாநிலத்தோர்க் கீந்தார்
    இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால்
  3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
    உடன் சுதந்தரராயிருக்க
    கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
    விளங்க ஒளி விளங்க — நன்றியால்
  4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
    அறிந்தே வந்திடுவீர்
    அளவில்லாத்திரு ஆக்கமிதனை
    அவனியோர்க்களிப்பீர் — நன்றியால்
  5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
    இராஜனாய் சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே
    இயேசுவின் முகமே — நன்றியால்

Nandriyal Paadiduvom Nallavar Yesu Lyrics in English

nantiyaal paadiduvom
nallavar Yesu nalkiya ellaa
nanmaikalai ninaiththae

  1. sengadal thanai naduvaayp piriththa
    engal thaevanin karamae
    thaangiyathae innaal varaiyum
    thayavaay maathayavaay — nantiyaal
  2. maranaththai neekkiyae jeevanai aruliya
    maaperungirupai
    maanilaththork geenthaar
    Yesu suvisesha oliyaay — nantiyaal
  3. uyirppiththae uyaththinaar unnatham varai
    udan suthanthararaayirukka
    kirupaiyaay eevaay varum kaalangal
    vilanga oli vilanga — nantiyaal
  4. alaikkappattaோrae unnatha alaippinai
    arinthae vanthiduveer
    alavillaaththiru aakkamithanai
    avaniyorkkalippeer — nantiyaal
  5. seeyonaip panninthumae kiristhaesu
    iraajanaay seekkiram varuvaar
    sinthai vaippom santhikkavae
    Yesuvin mukamae — nantiyaal

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply