Narkani Thaetitum Nallaantavaa நற்கனி தேடிடும் நல்லாண்டவா

நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள்

  1. நற்கனி தேடிடும் நல்லாண்டவா
    நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
    வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
    வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும்
  2. மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
    கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
    எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
    தப்பாது கனிதர அருள் தந்திடும்
  3. உம்பணி செய்திட கனி கொடுக்க
    எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
    உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
    உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும்
  4. தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
    தியானித்து உம்மோடு உறவாடவே
    திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
    தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும்
  5. என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்
    ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
    இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
    ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும்

Narkani Thaetitum Nallaantavaa Lyrics in English

nilaiththirungal-kanikodungal

  1. narkani thaedidum nallaanndavaa
    naanoru paalmaram ennaip paarum
    vaalnaalai veennaalaayk kaliththittaenae
    varunthum ippaaviyaik kannnnokkidum
  2. meyyaana thiraatchaைch seti Yesuvae
    kotiyaaka innainthitta ennaip paarum
    eppothum ummil naan nilaiththirukka
    thappaathu kanithara arul thanthidum
  3. umpanni seythida kani kodukka
    emmai neer alaiththittir therinthu konnteer
    um vaakkai ennil neer niraivaettidum
    um siththam niraivaetti uthaviseyyum
  4. thinanthorum vaethaththai virumpidavae
    thiyaaniththu ummodu uravaadavae
    thiralaaka umakkontu kanikodukka
    thinanthorum ennai neer suththam seyyum
  5. ennai naan pataiththittaen palipeedaththil
    aettu neer eduththaanndu vali nadaththum
    iruthiyil ummukam tharisikkavae
    aelaiyaam enakku neer arul thanthidum

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply