நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள்
- நற்கனி தேடிடும் நல்லாண்டவா
நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும் - மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
தப்பாது கனிதர அருள் தந்திடும் - உம்பணி செய்திட கனி கொடுக்க
எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும் - தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
தியானித்து உம்மோடு உறவாடவே
திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும் - என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்
ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும்
Narkani Thaetitum Nallaantavaa Lyrics in English
nilaiththirungal-kanikodungal
- narkani thaedidum nallaanndavaa
naanoru paalmaram ennaip paarum
vaalnaalai veennaalaayk kaliththittaenae
varunthum ippaaviyaik kannnnokkidum - meyyaana thiraatchaைch seti Yesuvae
kotiyaaka innainthitta ennaip paarum
eppothum ummil naan nilaiththirukka
thappaathu kanithara arul thanthidum - umpanni seythida kani kodukka
emmai neer alaiththittir therinthu konnteer
um vaakkai ennil neer niraivaettidum
um siththam niraivaetti uthaviseyyum - thinanthorum vaethaththai virumpidavae
thiyaaniththu ummodu uravaadavae
thiralaaka umakkontu kanikodukka
thinanthorum ennai neer suththam seyyum - ennai naan pataiththittaen palipeedaththil
aettu neer eduththaanndu vali nadaththum
iruthiyil ummukam tharisikkavae
aelaiyaam enakku neer arul thanthidum
Leave a Reply
You must be logged in to post a comment.