Paavam Pokkum Jeevanathiyai பாவம் போக்கும் ஜீவநதியைப்

பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர் வந்து பாரீர் – பாரில்

தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் – பாரில்

கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே – அதோ
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர் – பாரில்

பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி – நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் – பாரில்

பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து – அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர் – பாரில்

ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
அறுதி யடைவர் வேறொருதிநதிக்
கலையார் தேடி யலையார் – பாரில்

நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நிதியிதிலே – தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட – பாரில்


Paavam pokkum jeevanathiyai Lyrics in English

paavam pokkum jeevanathiyaip
paareer vanthu paareer – paaril

theevinai theerkkum thaevamariyin
thiruraththa mintha aaraam – paaril

kalvaari malaichchikara meethoottuk
kannkal ainthu thiranthae – atho
malkich siluvai yatiyil vilunthu
valinthoduthu paareer – paaril

paavachchumaiyaal nonthu sornthu
pathari vilun thalari – nitham
kooviyalutha anantham paerithil
kuliththae yulang kaliththaar – paaril

paththarulaththi litaividaamal
paaynthu valameenthu – athai
niththamum parisuththa kunaththil
nilainaattuthu paareer – paaril

oruthara intha nthiyin theerththam
unntoo jeevan kanntoor – thaakam
aruthi yataivar vaeroruthinathik
kalaiyaar thaeti yalaiyaar – paaril

niththiyanthanil kalanthuraiyunj sen
neeraar nithiyithilae – thangal
vasthiran thoyththa suththar sapaiyil
vaalnthugeetham paada – paaril


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply