- போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். - போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா! - போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
Potrum Potrum Punniya Naadarai Lyrics in English
- pottum, pottum! punnnniya naatharaip pottum!
vaanor kootip paadavum inpamaay,
paarilaeyum naama sangaீrththanam seyya;
maanthar yaarum, vaarum aananthamaay.
naesa maeyppan karaththil aenthumaaru
Yesu naathar nammaiyum thaanguvaar;
pottum, pottum! theyva kumaaranaip pottum!
paathukaaththu niththamum poshippaar. - pottum, pottum! punnnniya naatharaip pottum!
paavam pokkap paarinil jenmiththaar;
paadupattup piraanath thiyaakamum seythu
vaanaloka vaasalaith thiranthaar.
maa karththaavae, sthoththiram entum entum!
vaalka, vaalka, jekaththu ratchakaa!
arul naathaa, maasanukaa paranjaோthi,
vallanaathaa, karunnai naayakaa! - pottum, pottum! punnnniya naatharaip pottum!
vinnnum mannnum isainthu paadavum;
pottum, pottum, meetpar makaththuvamaaka
aatchiseyvaar niththiya kaalamum;
aeka raajaa, maatchimaiyodu vanthu,
Yesu svaami, poomiyil aalumaen;
lokam engum neethiyin sengaோlai ochchi
jothiyaakap paalanam pannnumaen.
Leave a Reply
You must be logged in to post a comment.