Raasa Raasa Pitha Maintha ராச ராச பிதா மைந்த

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக — ராச

  1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
    நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
    நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை — ராச
  2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
    வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
    பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித — ராச
  3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
    பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
    கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு — ராச
  4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
    கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
    நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர — ராச

Raasa Raasa Pitha Maintha Lyrics in English

raasa raasa pithaa maintha thaesulaavusathaa nantha
yaesu naayakanaar sontha maesiyaa nanthanae!
jekatheesu raesuran suka naesa meesuran maka — raasa

  1. maasilaa manniyae! manthra aasilaa anniyae! sunthara
    naesamae panniyae, thanthira mosamae thanniyae!
    niraivaana kaanthanae! iraiyaana saanthanae! marai — raasa
  2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha
    vaetha panthanamaay vantha paatham vanthanamae,
    patha aamanaamanaa! suthanaamanaamanaa! sitha — raasa
  3. maenmaiyaa sananae, nanmai maevuposananae, thonmai
    paanmai vaasananae, punmai paava mosananae
    kirupaa karaa naraa! saruvaesuraa, paraa thiru — raasa
  4. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar
    kaedu moodavumae, vinthaiyodu paadavumae,
    naravaeda maevinaan, suraraadu kovinaan, para — raasa

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply