Sankeetham Paatitum Enthan Ullam சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்

சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்
பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும்
தங்கிடும் என் உள்ளில் ஜீவத் தண்ணீர்
சத்தியபாதை நான் கண்டேன்

அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும்
ஜீவ நதிகள் ஓடிடும்
சிலுவை நிழலின் அருகிலே
எந்தன் வாழ்க்கை மாறிற்றே

தளர்ந்த கால்கள் மான்கள் போல்
தாவி ஓடி பெலன் பெறும்
தாவீதின் மைந்தன் இயேசுவின்
ஆவியினாலே உயிர் பெறும்

பாவ சுமைகள் விலகிவிடும்
சாப கட்டுகள் அறுந்திடும்
கல்வாரி ரத்தத்தின் வல்லமையால்
வஞ்சகன் வலைகள் ஒழிந்திடும்


Sankeetham Paatitum Enthan Ullam Lyrics in English
sangaீtham paadidum enthan ullam
pongidum aanantham intum entum
thangidum en ullil jeevath thannnneer
saththiyapaathai naan kanntaen

anpin vellangal paaynthidum
jeeva nathikal odidum
siluvai nilalin arukilae
enthan vaalkkai maaritte

thalarntha kaalkal maankal pol
thaavi oti pelan perum
thaaveethin mainthan Yesuvin
aaviyinaalae uyir perum

paava sumaikal vilakividum
saapa kattukal arunthidum
kalvaari raththaththin vallamaiyaal
vanjakan valaikal olinthidum


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply