Seer Aesu Naathanukku Jeyamangalam சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு — சீர்

  1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
    நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
    ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு — சீர்
  2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
    கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு — சீர்
  3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
    பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு — சீர்

Seer Aesu Naathanukku Jeyamangalam Lyrics in English
seer aesu naathanukku jeyamangalam – aathi
thiri yaeka naathanukku supamangalam

paaraetru neethanukku , parama porpaathanukku ,
naeraetru pothanukku, niththiya sangaீthanukku — seer

  1. aathi saru vaesanukku, eesanukku mangalam
    akilap pira kaasanukku, naesanukku mangalam
    neethi paran paalanukku , niththiya kunnaalanukku,
    othum anukoolanukku , uyar manuvaelanukku — seer
  2. maanaapi maananukku , vaananukku mangalam
    valar kalaik kiyaananukku , njaananukku mangalam
    kaanaan nal thaeyanukkuk kannimariseyanukku,
    konaar sakaayanukku kootru peththa laeyanukku — seer
  3. paththu latcha naththanukkuch suththanukku mangalam

parama pathaththanukku niththanukku mangalam
saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku,
paththar upa kaaranukkup parama kumaaranukku — seer


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply