செல்வோம் வாரீர் இயேசு பேரில்
பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
அணி அணியாய்க் கூடிவந்து
துதி செலுத்திச் செல்வோமே செல்வோமே!
- ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2
கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2
நடுவானில் பகல் முழுதும் நின்றதே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! - சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2
வல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! - முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே – 2
நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே – 2
வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!
Selvoem Vaareer Iyaesu Paeril Lyrics in English
selvom vaareer Yesu paeril
paaril ullor aasai kolla
anni anniyaayk kootivanthu
thuthi seluththich selvomae selvomae!
- aelae naalil eriko kottaை kutai sarinthu veelnthathae
kol atiyil sengadalum iranndu pirivaay nintathae – 2
kipiyon maelae sooriyanum aayalonil ampuliyum – 2
naduvaanil pakal muluthum nintathae
selvomae! selvomae! selvomae! - samuththiram puranndu vanthaal Yesu kathavataiththuth thaaliduvaar
itikkum minnal olikkum avarae valivakuththuth thanthiduvaar – 2
iraasikalai athinathin kaalaththilae varappannnuvaar – 2
vallavar nam naduvil vanthaar – selvomae
selvomae! selvomae! selvomae!
- mukil ulaavum imayam thottu alai iraiyum kumari varai
anni anniyaay Yesuvin geel ooliyaraaych selvomae – 2
neelavaanil kaattinootae siluvaikkotiyai aettiyae – 2
vaalka Yesu naamam vaalka enpomae!
selvomae! selvomae! selvomae! -selvomae!
Leave a Reply
You must be logged in to post a comment.