Sollarum Meighanare Menmaiprabuve சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை — சொல்

சரணங்கள்

  1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
    கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
    வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
    பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை — சொல்
  2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
    உச்சித சுதந்தர அருள்வாரி,
    ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
    துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை — சொல்
  3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
    தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
    செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
    செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை — சொல்

Sollarum Meighanare Menmaiprabuve Lyrics in English

sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,
suroopath tharoopak konaarae – urai

anupallavi

vallaranj siranthu manuvaanaarae – uyar
illaran thuranthu kutilaanaarae – urai — sol

saranangal

  1. maadaayar thaedum vasthupakaari – miku
    kaedaalar naadung kiristhu sarkaari,
    vaiyakam purappatharku vanthaarae – arul
    peythu navamum thavamun thanthaarae – urai — sol
  2. achchaya savunthara asareeri – athi
    uchchitha suthanthara arulvaari,
    aiyaa vallaavae, maathaevaa – o!
    thuyyaa, nallaavae, aekovaa – urai — sol
  3. paava vinai yaavaiyun theerththaarae – uyar
    thaeva sapaiyil emaich serththaarae
    sellamaay mukam paarththaarae – perum
    selvam pol emaich serththaarae – urai — sol

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply