Tag: என் இயேசு பாலன்

  • என் இயேசு பாலன் En Yesu Balan

    என் இயேசு பாலன் பிறந்தாரே
    எழிலோடு கண்கள் திறந்தாரே
    பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்
    மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2

    இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்
    அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2
    உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்
    உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2

    முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
    குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2
    மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே
    சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2

    கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட
    மூவரசர் தேடிவந்து பதம் நாட – 2
    ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட
    ஆனந்த அற்புதர் வந்தாரே – 2


    En Yesu Balan Pirantharae
    Ezhilodu Kangal Thirandharae
    Pani Thoovum Nalliravu Kuliril
    Manu Dhevan Mannil Malarndharae – 2

    Irul Thindra Iravil Orr Oli Minnal
    Arul Sindhum Kangal Iru Vinmeengal – 2
    Uttrarum Uravondrum Illadha Bethalayil
    Unnadharum Thulli Asaindharae – 2

    Munnanayil Vaikolae Panjanaiyo
    Kulir Vaadai Paadiyathu Thalelo – 2
    Maadadayum Thozhuvathil
    Mannulagin Mannvanae
    Sisuvaaga Meippan Vantharae – 2

    Kan Minni Pon Velli Thisai Kaata
    Moovarasar Thedi Vanthu Patham Naada – 2
    Aatidaiyaar Siru Kootam
    Aavaludan Thudhi Paada
    Aanandha Arpudhar Vantharae – 2