Tag: சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான

  • சுத்திகரியும் சுத்திகரியும் Suthikariyum suthikariyum

    சுத்திகரியும் சுத்திகரியும்
    நிலைவரமான ஆவியால் நிரப்பும்

    உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்
    உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்

    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
    அப்பொழுது சுத்தமாவேன்
    என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்
    அப்பொழுது சுத்தமாவேன்

    உள்ளத்தில் உண்மையாய் இருக்க
    நீர் விரும்பிடும் தெய்வமல்லோ
    உம் விருப்பத்தை நிறைவேற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்

    என் பாவங்கள் ஒன்றையும் பாரா
    பரிசுத்தமான தெய்வமல்லோ
    பாவ மன்னிப்பை நான் பெற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்


    Suthikariyum suthikariyum
    Nilaivaramaana aaviyal nirappum

    Um ratchanya sandhoshathai thaarum
    Um aavi ennai thaangida seiyum

    Ennai kazhuvum um eesopinaal
    Appozhudhu suthamaaven
    Ennai kazhuvum um thiru rathathaal
    Appozhudhu suthamaaven

    Ullathil unmaiyai irukka
    Neer virumbidum deivamallo
    Um virupathai niraivetrida
    Ennai kazvum um eesopinaal

    En paavangal ondrayum paara
    Parisuthamaana deivamallo
    Paava mannipai naan petrida
    Ennai kazhuvum um eesopinal