Tag: நான் உயிரோடிருக்கும்

  • நான் உயிரோடிருக்கும் Nan uyirotirukkum

    நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளழவும் என் தேவனே
    கீர்த்தனம் பண்ணுவேன்

    எனக்காய் மரித்த என்
    தேவன் நீரே உந்தன்
    அன்பை விட்டு விலகி நான்
    எங்கே போவேன் எந்தன்
    வாழ்நாளெல்லாம் உம்மை
    புகழ்ந்து பாடுவேன் கடைசி
    மூச்சிலும் சொல்வேன் இயேசு
    நல்லவர் என்று

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

    என்னை வாழவைக்க ஒப்புக்
    கொடுத்தீர் உம்மையே
    வாதிக்க கொடுத்தீரே திரு
    உடலை எனக்காய் உந்தன்
    அன்பு பெரியதே உந்தன்
    அன்பு பெரியதே – 2
    ஈடு இணையற்றதே உந்தன்
    கிருபை பெரியதே உந்தன்
    கிருபை பெரியதே – 2
    கிருபையான இயேசுவே

    பாவத்தின் முழு
    உருவமாய் நீர் பாவமானீரே
    பிரிக்கபட்டீரே என்னை இணைத்திடவே

    சாபமுள் முடியை உம்
    சிரசினில் சுமந்தீரே
    சாபமாய் தொங்கினீரே
    என்னை ஆசீர்வதிக்கவே


    Nan uyirotirukkum nalellam
    ummai pukazhnthu patuven
    nan ullazhavum en thevane
    kirththanam pannuven
    enakkay mariththa en
    thevan nire unthan
    anpai vittu vilaki nan
    engke poven enthan
    vazhnalellam ummai
    pukazhnthu patuven kataisi
    mussilum solven iyesu
    nallavar enru

    nallavar nir mikavum nallavar nir
    nallavar nir nanmaikal seypavar nir

    ennai vazhavaikka oppuk
    kotuththir ummaiye
    vathikka kotuththire thiru
    utalai enakkay unthan
    anpu periyathe unthan
    anpu periyathe – 2
    iitu inaiyarrathe unthan
    kirupai periyathe unthan
    kirupai periyathe – 2
    kirupaiyana iyesuve

    pavaththin muzhu
    uruvamay nir pavamanire
    pirikkapattire ennai inaiththitave

    sapamul mutiyai um
    sirasinil sumanthire
    sapamay thongkinire
    ennai aasirvathikkave